உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

திகழ்தரு கலைவளர் திங்கள்வந் துதித்தென

20

நிலமுழு தோங்குநன் னிலைகெழு வைசிய

குலமது மகிழுளங் கூரவந் துதித்தோன் சொற்பல மலர்கொடு தொடுத்தபா மாலையு முற்பல மாலையு மொளிர்மணி மொய்ம்பினன் பருவமொன் றிடையொரு பயனுத வெழிலிநாண் மருவவெப் பொழுதினு மருப்பல கொடையின

25

னெப்பொரு ளும்பகுத் திஃதிற் றாமென

வப்பொரு ளுண்மைதேர்ந் தறியநுண் ணுணர்வின னடைச்சி வாண்முக மலரவாய் நலத்தொடு

புடைவளர் விபுதரைப் போற்றிவாழ் புனிதன்

30

சேது பதியெனுஞ் செங்கோன் மன்னவற்

கோதுநற் றுணையென வுற்றபூதம் பாவை

யண்ணா சாமிவே ளருந்தவ மென்கொலென்

றெண்ணாற் றிசையுளோ ரியம்பிடத் தோன்றியோன்

சிவனடி யவரையச் சிவனெனப் பரவுந்

35

தவனடி முடிவிலாச் சைவ சிகாமணி

சிங்கார முதலிதன் சிந்தைகூர் மகிழ்ச்சியி

னிங்கா ரமுதன வின்சொலால் வேண்டலின்

முன்னூ லொழியப் பின்னூல் பலவினு

ளெந்நூ லாரு நன்னூ லாருக்

40

கிணையோ வெனத்தமி ழினிதுணர் பவர்க்கெலாந்

துணையீ தாமெனத் தோன்றுநன் னூற்கு

நயன்மிகு சங்கர நமச்சி வாயனாற்

பயன்மிகச் செய்திடப் பட்டதன் பின்னர்

தவஞா னந்தனிற் சால்புகூர் துறைசைச் சிவஞான முனிவனாற் றிருத்திடப் பட்ட விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கிக் கருத்துப் பதப்பொருள் காட்டுமற் றுஞ்சில வுறுமுறை காண்டிகை யுரையுளங் கொண்டு சிறுவரு முணர்தருஞ் செவ்வியிற் செய்தனன் றத்துவ முணர்திருத் தணிகை மடாதிபன் சத்தெனும் வீர சைவமா கேசன்

45

50

கற்றுணர்ந் தோங்கிய கந்தப்ப தேசிகன்