உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

பெற்றருள் விசாகப் பெருமா ளையனென்

றுலகு புகழ்தர வோங்கி

யிலகு மியற்பெய ரெய்து நாவலனே.

தொல்காப்பிய நன்னூல்

55

295

1858-ஆம் ஆண்டில் சாமுவேல் என்பவர் தொல்காப்பிய நன்னூலை இயற்றி அச்சிட்டார். அதற்கு அவரது இஷ்டராகிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரம்:

பூமிசை யகலா நான்முகத் தொருவன் படைப்புழி யின்சொலி னியக்கந் தெரிப்பான் இருக்கையாய் வாழிய ரெனாமே னிறுவிய வேங்கடங் குமரி யோங்கிய மேல்கீழ்ப் புணரிசூழ் வரைப்பி லணவிய முத்தமிழ்

5

ஆன்றதொல் கடலுட் டோன்றுறு மைம்பொருள் ஈரைஞ் ஞாற்றுச் சீரமை பணமணிச்

சூட்டரு ணெட்டுடற் கோட்டமில் பாப்பர

சேந்துபு கிடந்த மாண்பமை நீணிலத் தேவரு முணராத் தாவரும் பயன்கொள உயிர்தொறுஞ் சிவணிய செயிரறு பொதுநட நவிலுந் தனிமுதல் தவலருங் கைவலந் தமிழிசை கதுவிய தமருகத் தெழுமேழ் இரட்டிய வெழுத்தொலி தெருட்டிய வாரிய நெடுமொழிப் பாணிநி மடனிகு முதியோன் போன்மென விருந்தமிழ்ப் பான்மை முழுதுணர்

10

15

முகட்டுயர் பொதியப் பொகுட்டுழி யிருந்தருள்

பரமா சிரியற் பற்பகல் வழிபட்

டரும்பெற லியல்பெறீஇப் பொருந்திய பன்னிரு

மாணவக் குழாத்து ணீணிலை கொளுவிய

20

ஒல்காப் பெருஞ்சீர்த் தொல்காப்பிய முனி

தற்பெயர் தோற்றி யற்புறத் தந்த

ஐந்திர நிறைந்த வியந்தகு நுண்பொருட்

டொன்மைசால் காப்பியத் துண்மரீஇப் பொதிவன

பாட்டுவரை பெறுமேம் பாட்டுடை மையினில்

25

ஆனாக் கங்கன் மேனாள் வேண்டலின்