உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

சமரச பாடிய சித்தாந்த மெனவும்

வளம்பா டிலாத இளம்பூ ரணமும் மெய்ச்சொலாற் பழிச்சு நச்சினார்க் கினியமும் வானோர் மாண்பமை சேனா வரையமும்

சங்கர நமச்சி வாயமு மென்றிவை

1ஐந்துரை யுந்தொகுத் தின்புற வுண்மையின்

65

297

பூரண விருத்தி யெனவும் பெயர்புனைந்

திந்நூ லியற்றி யெழுதா வெழுத்திற்

பன்னூ னெறியிற் பதித்து நல்கினன்;

வளைநீர்க் கருங்கடன் மறிதிரை கொழிக்கும்

70

உளைவுறீஇப் பணில முயிர்த்தத நித்திலம்

கருங்கோட் டுப்புன்னை நறுங்கே ழரும்பர்

குருகின முயிர்க்கும் பரூஉமணி யொண்கரு

இஃதஃதெனா வயிர்ப்புறவயின் றொருந்தொ கூஉம்

நறைவார் சோலைப் பிறையா றெனுநகர்

75

வதிதரு சோழ வேளாள மரபிற்

பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த

நாட வருசுவி சேடதிச் தாந்தி

செங்குவளை யந்தார் தங்குமணி மார்பன்

80

நாம வேலைப் புவி நயக்கும்

சாமு வேலெனுந் தகைமை யோனே.

குசேலோபாக்கியானம்

வல்லூர் தேவராஜ பிள்ளையவர்கள் இயற்றிய குசேலோ பாக்கியானத்திற்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரம்.

நேரிசை ஆசிரியப்பா

பூமலி குளிர்தெண் புனற்பெருந் தடத்துக் கவையடிச் செங்கட் கஞல்பிணர் மருப்புக் கடமருள் செருத்தற் கவரிதளை பரிந்து புழற்கா லாம்பற் பூநனி மிசைவான்

அடிக்குறிப்பு

1. சங்கர நமச்சிவாயருரையில் சிவஞான முனிவருரையுமிருக்கின்றதாகலின்.