உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

றோறொடு நாட்பைஞ் சூட்டின மிரிய மடச்செழு நாரை வயிரெனப் பிளிறக்

5

கயலின மடவார் கண்ணிற் பிறழச் சலஞ்சலப் புஞ்சந் தளைபுக் கொளிப்ப முட்டாட் டாமரை மொய்த்தடை கிடக்கு மஞ்சிறைத் தும்பியகன்குலைப் பரப்பிற் றேங்கமழ் பொங்கர்ச் செறிந்திறை கொள்ள மாங்கனிக் கொள்ளை வரம்பில வுதிரக் குறுங்கழுத் தரம்பைக் கூன்குலை முறிய முட்புறப் பாகன் முதிர்கனி கிழியச் செறிபசுங் கந்திச் செழும்பழஞ் சிதறப் பொலியிலாங் கலிமுப் புடைக்காய் வீழ வெழுபுமீத் தகட்டகட் டிளவரால் பாயக் கருங்கடற் பாயுங் கந்தர நிகர்ப்பக்

10

கதழிவிற் பாய்ந்து கலக்குபுழி தந்து

கதிரிளம் பசும்புற் கறிக்கக் கல்லா

20

மழவிளங் கன்றைப் படர்ந்துவார்ந் தொழுகப்

பொழிபால் பெருகிப் புணர்திரைத் தீம்பால்

ஆழிகொ லோவென் றமரரு மயிர்ப்ப

மடையுடைத் தோடும் வரையாப் பெருவள

நல்லூ ரென்னும் வல்லூ ரதிபன்

25

பார்கரு ணீப்பப் பயில்குல மென்னுஞ்

சீர்கரு ணீகர் செழுங்குல சிகாமணி

மின்னப் பேந்திய வேணியற் கன்புறு

மன்னப் பேந்திரன் வரத்தினி லுதித்தோன்

இமையர் தருவு மிமையாச் சுரபியுங்

30

கமஞ்சூன் முகிலுங் கதிர்கான் மணியும்

அருநிதி யிரண்டு மழுக்கா றடையப்

பெருங்கொடை யெவர்க்குந் தருங்கர வள்ளல்

ஒழுக்கமுஞ் சீலமும் விழுப்பெறு தவமு

மானா வன்பு மானமும் பொறையு

35

நாடொறு நாடொறு நலம்பெற வளர்ப்போன்

நீனிறஞ் சேரா நெடுமால் போல்வான்

நுண்ணறி வுடையோர் நூற்பொருள் விரும்புந்