உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுக் கி.பி. 1783-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு வந்தார். இவர் வந்து அலுவல் செய்யத் தொடங்கியபின், கிழக்கிந்திய நாடுகளின் கலைகளையும் இலக்கியங் களையும் ஆராய்ந்தறிய ஒரு நிலையத்தை ஏற்படுத்தவேண்டும் என்று கருதினார். அதன்படியே 1784-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கல்கத்தால நகரத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு ஆசிய சங்கம்' என்னும் பெயருடைய ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் ஆதரவில் “ஆசிய நாட்டு ஆராய்ச்சிகள் என்னும் திங்கள் இதழ் ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பழைய கட்டடங்கள், பழைய சிற்பக்கலைகள், பழைய சாசனங்கள், பழைய நாணயங்கள், இந்திய மொழிகளின் இலக்கியங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தத் திங்கள் இதழில் எழுதப்பட்டன.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தேசத்தின் வடமேற்குப் பகுதிகளில் வழங்கிவந்த 'கரோஷ்டி எழுத்து சாசனங்களும், இந்தியாவின் மற்றப்பகுதிகளில் வழங்கிவந்த “பிராஃமி” எழுத்துச் சாசனங்களும் அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்தச் சாசன எழுத்துக்களைப் படிக்க யாராலும் முடியவில்லை. மிகப் பழமைவாய்ந்த அந்த எழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே மறைந்துபோக, புதிய புதிய எழுத்துக்கள் தோன்றி வழங்கி வந்தபடியினாலே, அப்பழைய எழுத்துக்கள் மறக்கப்பட்டு மறைந்துபோயின. ஆனால், கற்களில் எழுதிவைக்கப்பட்ட அந்தப் பழைய எழுத்துச் சாசனங்கள் அழியாமல் கிடந்தன. ஆனால், அந்தச் சாசன எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவரும் இலர். அந்த எழுத்துக்கள் பெரும் புதிராக இருந்தன. சில அறிஞர்கள் அந்தச் சாசன எழுத்துக்களைப் படிப்பதற்குத் திறவுகோலைக் காண முயன்றனர்.

6

இப்படி இருந்தபோது, மேற்படி ‘ஆசிய சங்கத்தின்' செயலாள ராக இந்த ஜேம்ஸ் பிரின்ஸெப்' அவர்கள், பலநாள் உழைத்து ஆராய்ந்து, பிராஃமி எழுத்துச் சாசனத்தைப் படிப்பதற்கு ஒரு திறவுகோலைக் கண்டு பிடித்தார். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மிகப் பழைய காலத்தில் வழங்கிவந்த நாணயங்களில் ஒருபக்கம் பிராஃமி எழுத்தும், மற்றொரு பக்கம் கிரேக்க எழுத்தும் எழுதப் பட்டிருந்தன. கிரேக்க எழுத்துக்களின் உதவியினால் அந்நாணயங் களில் இருந்த பிராஃமி எழுத்துக்களை இவர் வாசித்தார். இவ்வாறு சில