உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

/ 83

ஆலோசனை சபையில் விதிக்கப்பட்ட அச்சுச்சட்டம்.” இதற்கு “1835- ஆம் வருஷத்து ஆக்ட் என்னும் 11-ஆவது சட்டம்” என்பது பெயர்.

இந்தச் சட்டத்தின்படி 1823-ஆம் ஆண்டு கவர்னர் செனரலால் ஏற்படுத்தப்பட்ட சட்டமும் 1825, 1827-ஆம் ஆண்டுகளில் பொம் பாயில் ஏற்பட்ட சட்டங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்ட சட்டங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தைக் காலத்தவணைப் பதிப்புச் சட்டம் என்றும், புத்தகப் பதிப்புச் சட்டம் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

காலத்தவணைச் சட்டம்:- “சர்க்கார் சமாசாரங்களின் மேல் பிரசித்த செய்திகளாவது யுக்திகளாவது அடங்கியிருக்கிற அச்சிற் பதிப்பித்த எவ்விதமான காலக்கிரம புத்தகங்களையும் பிரசித்தஞ் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்டிருக்கிறது.

66

'காலக்கிரமமான அந்தப் புத்தகங்களை அச்சிற் பதிப்பிக் கிறவனும் பிரசித்தஞ் செய்கிறவனும் பிரசித்தம் பண்ணப்படும் அதிகார இடத்தின் மேஜிஸ்திரேட்டுக்கு முன்வந்து வாக்குமூலத்தை எழுதிக் கையெழுத்துப் பண்ணிக் கொடுக்கவேண்டும். எப்படி யென்றால், 'இன்னானாகிய நான் இந்த இடத்தில் அச்சுப் பதிப்பித்த அல்லது பிரசித்தம் பண்ணின அல்லது அச்சுப் பதிப்பித்துப் பிரசித்தம் பண்ணின இன்ன பெயரையுடைய காலக்கிரம புத்தகங் களை அச்சிற் பதிப்பித்தவன் அல்லது பிரசித்தம் பண்ணினவன் அல்லது அச்சுப் பதித்துப் பிரசித்தம் பண்ணினவன்' என்று வெளியிடவேண்டும்.

இந்த நிபற்தனைக்கு மாறுபட்டால் 5000 ரூபாய்க்கு மேற்படாத தொகை அபராதமும் 2 ஆண்டுக்கு மேற்படாத காவல் தண்டனையும் விதிக்கப்படும்.

ம்

புத்தகப் பதிப்புச் சட்டம்:- "கம்பினியாருடைய தேசங் களுக்குள்ளே மேற்சொன்ன 1835-ஆம் வருசம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு அச்சுப் பதிப்பிக்கப் பட்ட எல்லாப் புஸ்தகமும் காகிதமும் அச்சுப் போடுகிறவனுடைய பெயரையும் பிரசித்தம் பண்ணுகிறவனுடைய பெயரையும் அச்சுப் போட்டுப் பிரசித்தம் பண்ணுகிற இடத்தையும் அதன் மேல் தெரியும்படிக்கு அச்சுப் போட்டிருக்கவேண்டும். இந்த விதிக்கொத்த படிக்கில்லாமல் வேறே விதமாக யாதொரு புஸ்தகத்தை கடிதாசியை எவனாவது