உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அச்சுப் போட்டதாய் அல்லது பிரசித்தம் பண்ணினதாய் ருசுவானால் 500 ரூபாய்க்கு மேற்படாத தொகையை அபராதத்தினாலேயுந் தெண்டிக்கப்படுவானென்று விதிக்கப் பட்டிருக்கிறது.

وو

இந்தச் சட்டத்தின் முழு விவரம் 1835-ஆம் ஆண்டு வெளியான Fort St. George Gazette-இல் தமிழிலும் ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் வெளியிடப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடியே அக்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் முகப்புப் பக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் மாதிரி ஒன்றைப் படத்தில் காண்க.

எழுதா எழுத்து

அச்சுப் புத்தகங்கள் வந்தவுடனே ஏட்டுச் சுவடிகள் மறைந்துவிடவில்லை. 19-ஆம் நூற்றாண்டிலே ஏட்டுச் சுவடிகளும் அச்சுப் புத்தகங்களும் இரண்டும் வழக்கத்தில் இருந்தன. பின்னர் 20– ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல மெல்ல ஏட்டுச் சுவடிகள் மறைந்து அச்சுப் புத்தகங்கள் நிலைபெற்றன.

அச்சு எழுத்தை எழுதா எழுத்து என்று கூறினர் சென்ற நூற்றாண்டிலிருந்த புலவர்களான அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும் திருத்தணிகை விசாகப் பெருமாளையரும். 1858-ஆம் ஆண்டு சாமுவேல் என்பவர் தொல்காப்பிய நன்னூல் என்னும் இலக்கணத்தை அச்சிற்பதிப்பித்தபோது, அதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார்,

இந்நூல் இயற்றி எழுதா எழுத்தில்

பன்னூல் நெறியிற் பதித்து நல்கினான்'

என்று கூறினார். ப. அரங்கசாமிப்பிள்ளை அவர்கள் 1883-ஆம் ஆண்டில் முதன் முதலாகச் சீவக சிந்தாமணியை அச்சுப் புத்தகமாக வெளியிட்டார். அந்தப் பதிப்புக்குச் சாற்றுகவி அளித்த மேற்படி முதலியார் அவர்கள்.

66

கனக சபைமால் தனதுநல் லுதவியால்

எழுதா வெழுத்தில் இயைவித் தனனால்’

என்று கூறினார்.

கவிராஜசேகரர் ஆரோக்கிய நாயகர் என்பவர் "தேம்பாவணிக் கீர்த்தனை” என்னும் நூலை இயற்றி 1857-ஆம் ஆண்டு சென்னையில்

6