உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

என்பவரும் 1709-ஆம் ஆண்டு சூலை மாதம் 9-ஆ ம் நாள் தரங்கம்பாடி வந்துசேர்ந்தனர். ஆனால், இவ்விரு மதபோதகரின் வரவு தரங்கம்பாடி அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. தரங்கம்பாடி கவர்னர் இவர்களுக்குச் செய்த கொடுமைகளையும் இன்னல் களையும் இங்கு எழுதப்புகுந்தால் அதிக இடங்கொள்ளும். ஆகையால் அவற்றை எழுதவில்லை. பிறகு, இவர்கள் மத போதனை செய்ய முற்பட்டபோது, மேற்படி அதிகாரி இவர்களுக்குப் பல தடைகளை உண்டாக்கினார். கடைசியாக, இவர்கள் சமயத்தொண்டு செய்வதற்கு இடமளிக்கப் பட்டது. ஆனால், மற்றொரு தடை இவர்களுக்கு ஏற்பட்டது. அஃது என்னவென்றால், மொழித் தடையே. இவர்களுக்குத் தமிழ், போர்ச்சுகீசு என்னும் மொழிகள் தெரியா: ஆகையால், இவர்களால் சனங்களுக்குச் சமய போதனை செய்ய இயலவில்லை. அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்திருந்த ஐரோப்பியர்களும், அவர்களுக்கும் இந்தியருக்கும் பிறந்த கலப்புச் சாதியாரும் போர்ச்சுகீசு மொழியைப் பேசிவந்தனர். ஆகவே, ஐரோப்பியருக்கும் கலப்புச் சாதியாருக்கும் மதபோதனை செய்யவேண்டுமானால், அவர்கள் பேசும் போர்ச்சுகீசு மொழியை இவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும். இரண்டாவது, சுதேசிகளாகிய தமிழர்களுக்குச் சமயபோதனை செய்ய வேண்டு மானாலும், அவர்களின் தாய்மொழியாகிய தமிழ்மொழியை (அல்லது "மலபார் மொழி”யைக்) கற்கவேண்டும். (அக்காலத்தில் நமது நாட்டில் வாழ்ந்திருந்த ஐரோப்பிய சாதியார் தமிழரை "மலபாரிகள்” என்றும், தமிழ் மொழியை "மலபார் மொழி” என்றும் வழங்கிவந்தனர்.) இவ்விதம் இவ்விரண்டு செர்மானிய மதபோதகர்களுக்கும் மொழித் தடை ஏற்பட்டபடியால், முதலில் இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்வதென்று தீர்மானித்து, அதன்படி பிளீச்சௌ என்பவர் போர்ச்சுகீசு மொழியையும், ஸீகன்பால்கு ஐயர் "மலபார்" (தமிழ்) மொழியையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

ஸீகன்பால்கு ஐயர் தமிழ்மொழியைக் கற்பதிற் சில இடைஞ் சல்கள் இருந்தன. தமிழ்மொழி ஐரோப்பிய மொழிகளுக்குப் பெரிதும் வேறுபட்ட மொழியாகையால், இதைக் கற்பது அவருக்குக் கடினமாக இருந்தது. அன்றியும் தமிழ்மொழியைக் கற்பிக்க வீரமாமுனிவருக்கு வாய்த்ததுபோல், தேர்ந்த தமிழ்ப்புலவர்கள் இவருக்கு ஆசிரியராக வாய்க்கவில்லை. மேலும், ஐரோப்பாக் கண்டத்தில் அச்சுப் புத்தகத்தைப் படித்துப் பழகிய இவர் ஓலைச்சுவடிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. ஏனென்றால், அக்காலத்தில் தமிழ்நாட்டில்