உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லிஸ் துரை (777 - 1819)

(Francis Whyte Ellis)

எல்லிஸ் துரையவர்கள் ஆங்கிலேயர். சென்னை அரசாங் கத்தில் 1796-இல் உத்தியோகத்தில் அமர்ந்தார். பின்னர், பற்பல உயர்தர உத்தியோகங்கள் செய்து, கடைசியாய், சென்னைநகரம் முதலிய இடங்களிற் கலெக்டராக இருந்தார். இவர் மிராசுதார் தொடர்பான வழக்குகளிலும், சென்னைமாகாண அரசியல் தொடர்பான எல்லாத் துறைகளிலும் தேர்ந்த நிபுணர் என்று நன்கு மதிக்கப்பட்டனர். தமிழ்மொழி, வடமொழி என்னும் இரண்டிலும் வல்லவர். சென்னையில் வாழ்ந்திருந்த வித்துவான் சாதிநாத பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்."சென்னைக் கல்விச் சங்கத்”தின்' பொறுப்பு வாய்ந்த உறுப்பினராக இருந்தவர். மேற்படி கல்விச் சங்கத்தின் மேலாளரும் சிறந்த தமிழ்ப் புலவருமாய் விளங்கியவருமான முத்துசாமி பிள்ளை என்பவரை 1816-இல் தமிழ் ஜில்லாக்களில் அனுப்பி, பல ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேர்ப்பித்ததோடு, முக்கியமாக, வீரமாமுனிவர் இயற்றிய நூல்களைத் தேடிக் கொண்டுவரச்செய்தார். அன்றியும் முத்து சாமி பிள்ளையவர்களைக்கொண்டே வீரமா முனிவரின் வாழ்க்கை வரலாற்றினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடத் தூண்டினார். இவர் அவ்வாறு செய்திராவிட்டால், தத்துவபோதக சுவாமி இயற்றிய நூல்கள் அக்காலத்துப் போற்று வாரின்றி இறந்துபட்டது போலவே, வீரமாமுனிவர் இயற்றிய நூல்களும் அவரது வரலாறும் இப்போது தமிழருக்குத் தெரியாமலும் பயன்படாமலும் இறந்துபட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதன்பொருட்டுத்

பட்டிருக்கிறது.

தமிழுலகம் இவருக்குக் கடமைப்

இவர் திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரத்திற்கு ங்கிலத்தில் உரையெழுதி அச்சிட்டிருக்கிறார். சிந்தாமணி, புறநானூறு, நாலடியார், பாரதம் முதலிய நூல்களிலிருந்து மேற்படி