உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

109

உரையில் மேற்கோள்கள் காட்டியிருப்பதிலிருந்து, இவர் பண்டைத் தமிழ்நூல்கள் பலவற்றைப் படித்திருக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது. திருக்குறளின் மற்றப் பகுதிகளுக்கும் விளக்கவுரை எழுதி அச்சிடுவதற்கு முன்னே, 1819-ஆம் ஆண்டில் இராமநாத புரத்திற் காலமானார்.

இவர் செய்யுள் இயற்றுவதில் விருப்பமுள்ளவர் என்று தோன்றுகிறது. தரவுகொச்சகக் கலிப்பாவாற் சில செய்யுள்களை இயற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. அச் செய்யுள்கள் எமக்குக் கிடைக்கவில்லை. இவர் காலத்தில் சென்னைமாநகரில் வாழ்ந்து வந்தவரும், சிறந்த தமிழ்க் கவிஞருமாகிய இராமச்சந்திரக் கவி ராயரின் உற்ற நண்பராக இருந்தார். இந்த இராமச்சந்திரக் கவிராயர் "சகுந்தலை விலாசம்”, “பாரதி விலாசம்”, “ "தாருகா விலாசம்”. 'இரணிய வாசகப் பா”, “இரங்கோன் சண்டை நாடகம்" முதலிய நூல்களை இயற்றியவர். இக்கவிராயரின் கல்வித் திறமையைப் புகழ்ந்து, எல்லிஸ் துரையாவர்கள் ஒருபாடல் பாடியிருக்கிறார். அது தனிப்படற்றிரட்டிற் சேர்க்கப் பட்டிருக்கிறது. அப்பாடல் இது:

66

66

"செந்தமிழ் செல்வனு மோரா யிரந்தலைச் சேடனும்யாழ் சுந்தரத் தோடிசைவல்லோனும் யாவரும் தோத்திரஞ்செய் கந்தனைச் சொல்லுங் கவிராமச் சந்த்ரனைக் கண்டுவெட்கி அந்தர வெற்பிழி பாதாளந் தேடி யடங்கினரே.’

"

1. Madras College

அடிக்குறிப்பு