உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரேனியுஸ் ஐயர்

(Charles Theophilus Edward Rhenius)

(1790-1838)

இரேனியுஸ் ஐயர் செர்மனி தேசத்திற் பிறந்தவர். தாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து அரசாங்க ஊழியத்தில் அமர்ந்திருந்த இவர், 1810-ல் பெர்லின் நகரஞ் சென்று "லூத்தரன் மிஷன்" என்னும் சங்கத்தைச் சேர்ந்து, சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்து, 1812-இல் குருப்பட்டம் அளிக்கப் பெற்றார். பிறகு இங்கிலாந்து சென்று “சர்ச் மிஷன் சங்க”த்தில் 18 மாதம் இருந்த பின்னர், 1814-இல் சென்னைக்கு வந்து சமயத்தொண்டாற்றிவந்தார். 1820 இல் திருநெல்வேலியில் உள்ள பாளையங் கோட்டைக்கு மாற்றப்பட்டு, அங்கே பல ஆண்டுகளாகச் சமய ஊழியஞ்செய்து, பெரும்பாலோரைக் கிறித்துமதத்திற் சேர்த்தார். கடைசியாகத் தமது 49ஆம் வயதில் 1838ஆம் ஆண்டு சூன் மாதம் 5ஆம் நாள் காலமானார். இவரது உடல் திருநெல் வேலியில் உள்ள முருகன்குறிச்சி என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லொழுக்கமும் நற்குணமும் பொருந்திய இவர், சமயத் தொண்டுமட்டுமின்றி, பற்பல தரும் அறச்செயல்களையும் செய்திருக்கிறார். டோனா என்னும் செர்மனியப் பிரபுவின் பொரு ளுதவி பெற்றுப் பாளையங்கோட்டைக்குத் தெற்கே 25 மைல் தூரத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதற்கு டோனாவூர் என்று பெயரிட்டு, அதில் கிறித்தவர்களைக் குடியேற்றினார். “தரும சங்கம்” என்று ஒரு சங்கம் ஏற்படுத்தி, அதன் மூலமாகப் பாடசாலைகள், வீடுகள், கோயில்கள் முதலியன கட்டுவதற்கு நிலங்கள் வாங்கிக் கொடுத்தார். இச்சங்கத்தின் உதவியினால்தான், திருநெல்வேலியில் சாந்தபுரம், சந்தோஷபுரம் முதலிய பன்னிரண்டு கிராமங்கள் ஏற்பட்டன. புத்தகம் எழுதும் சங்கம் ஒன்றுண்டாக்கி, அதன் மூலமாகப் பல புத்தகங்களை வெளியிடச் செய்தார். விதவைகளின் ஆதரிப்புச் சங்கம் ஒன்று ஏற்படுத்தி, மிஷன் ஊழியர்களின் விதவைகளுக்குப் பன்ஷன் (ஜீவனாம்சம்)