உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

111

கொடுத்துவர ஏற்பாடு செய்தார். இவ்விதம் பற்பல நற்செயல்கள் புரிந்துவந்த இப்பெரியார் இவ்வுலக வாழ்க்கையை நீத்தபோது கண்ணீர்விட்டிரங்காதார் இலர். அச்சமயம் இரேனியுஸ் ஐயரின் உற்ற நண்பராகிய திருப்பாற்கடல் நாத கவிராயர் அவர்கள் பாடிய இரங்கற்பா வருமாறு:

இரேனியூசையர்க்குத் திருப்பாற்கடல் நாதர் பாடிய கையறுநிலை

சரணமென் றடைந்தோர் தங்களுக் கிரங்கித்

தமனிய மீந்துமூ வகையாங்

கரணமென் பவையாற் றீங்குறா வண்ணங் காசினி தன்னிலா தித்தன் கிரணம்போ லறிவைப் பரப்பிய விரேனியூ சென்னுங் கிழவனைச் சார்ந்த மரணமே நினக்கு மரணம்வந் துறாதேல் மனத்துய ரறாதுநல் லோர்க்கே

வேதங்கள் யாவு மறிந்தவர் போலு

மெய்ம்மையாந் தன்மையை விளக்கும் போதகர் போலுங் கோலத்தாற் காட்டிப் பொருட்படாத் தீமையே யியற்றும்

பாதக ரிருக்க விரேனியூ சென்போன், பண்புள்ள குருவென வறிந்தும்

ஏதமி லாத மரணமே யவனை

யேற்றதா லென்பய னடைந்தாய்?

அன்பெனும் விளக்கி லருளெனு நெய்பெய் தாழ்ந்தசிந் தையைத்திரி யாக்கி

மன்பெரு மானத் தீபம தேற்றிவான்

கடவுளைக் கண்டு மனிதர்க்(கு) என்புரு கிடநல் லறிவினைப் புகட்டும் இரேனியூ சென்னும்பே ரிறைவன் தன்பெரும் புகழை யுலகினிற் பரப்பிச் சார்ந்தனன் பரகதி தன்னில்