உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

117

போப் ஐயரின் தமிழநடையின் மாதிரிக்காக, அவர் எழுதிய வெஸ்லியன் சங்கம் என்னும் கட்டுரையைக் கீழே தருகிறோம். இக்கட்டுரை பவர் ஐயர் என்பவர் 1841-இல் வெளியிட்ட வேத அகராதி என்னும் நூலில் முதன் முதல் வெளிவந்தது:-

வெஸ்லியன் சங்கம்

"யோவான் வெஸ்லி என்ற வேத சாஸ்திரியால் இந்தச் சங்க மேற்படுத்தப்பட்டதினாலே இதற்கு இந்தப் பேருண்டாயிற்று. அன்றியும் இந்தச் சங்கம் அர்மேனியுஸ்4 என்றவர் போதித்த சில முக்கியமான உபதேசங்களை ஏற்றுக்கொள்ளுகிறதினாலே அர்மேனியன்' சபை என்றும், விசேஷித்த முறைமையாள ரென்று அர்த்தங்கொள்ளுகிற மெத்தோடிஸ்து சபை என்றும் பெயர் பெற்றது.

66

وو

வெஸ்லியன் சபை ஏற்பட்ட தெப்படியெனில், யோவான் வெஸ்லி என்பவருடைய சகோதரராகிய சார்லஸ் வெஸ்லி' என்பவரும் மற்றப் பன்னிரண்டு பெயரும் ஆக்ஸ்போர்ட்8 என்னும் நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற கல்விச்சாலையிலே படிக்கிற நேரத்தில் அவர்கள் வாரத்தில் இரண்டு மூன்றுநாள் சாயங்காலத் திலே கூடிவந்து வேதப் பயிற்சி செய்து செபம் பண்ணி வந்தார்கள். பிற்பாடு மேற்சொல்லிய இரண்டு சகோதரரும் அமெரிக்காக் கண்டத்திற்குப் போய்ப் பிரசங்கம் பண்ணி அங்கே ஏறக்குறைய ஒன்றரை வருடமட்டு மிருந்தார்கள். தங்கள் தேசத்துக்குத் திரும்பி வந்தபோது திரளான சனங்கள் கெட்டமார்க்கமாய் நடந்து சுவிசேஷத்தை யசட்டை பண்ணி யநேகர் வேதத்தைத் தள்ளியிருக் கிறதைப் பார்த்து மகா வயிராக்கியங் கொண்டு வீதிகளிலும் வெளிகளிலும் பிரசங்கித்து வீதிகளிலும் வேலிகளுக்கருகேயும் புறப்பட்டுப்போய் இயேசுநாதர் கட்டளை யிட்டபடி சனங்களை வருந்தி நன்மைக் கழைத்தார்கள்.'

وو

“இவ்விதமாய் வெளியிலே திரிந்து பிரசங்கிக்கத் துவக்குகிற தினாலே அவர்களுக்குப் பெரிய விரோதமுண்டாயிற்று. இப்படி யிருக்கும்போது அநேக குருக்கள்மார் யோவான் வெஸ்லி என்பவரைத் தங்கள் கோயில்களிலே பிரசங்கியாமல் தடைசெய்ததி னாலே அவர் பல வூரிலுங் கிராமத்திலும் மற்ற இடங்களிலும் பிரவேசித்து ஒருநாளிலே இரண்டு மூன்று தரம் பிரசங்கம் பண்ணிச் சுவிசேஷத்தின் நற்செய்தியை வெளிப்படுத்தினார்.