உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

'அவர் பண்ணும் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறவர்களில் நேகரதிகமதிகமா யவரண்டைக்கு வந்து அவரைத் தயவு செய்து தங்களுக்குச் சுவிசேஷத்தைப் பூரணமாய் விஸ்தரித்துப் பேச வேண்டுமென்று கேட்டுக்கொண்டதின்பேரில் அவர் ஏறக் குறையப் பன்னிரண்டு பன்னிரண்டு சனங்களை அந்நியோந்நியக் கூட்டமாகப் பிரித்து ஒவ்வொரு கூட்டத்துக்கு ஒவ்வொரு தலைவனை° ஏற்படுத்தி அவர்கள் வாரந்தோறுங் கூடிவந்து பேசித் தேற்றரவு சொல்லி ஒருவருக்கொருவ ருதவி செய்யும்படியாகச் சட்டம் செய்தபின்பு, பற்பல கிராமங்களிலும் பட்டணங்களிலு மப்படிக்கொத்த சபைக

ளுண்டாக்கப்பட்டன.

وو

"இந்தச் சபையாருக்குள்ளே சிலர் வேதத்திலே தேர்ந்தவர் களும் யோக்கியமுள்ளவர்களுமாயிருந்து மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கத் தொடங்கினபோது இவர்களைக் கடவுள் தாமே தெரிந்து கொண்டு இவர்களுக்குத் தகுந்த வரத்தைக் கொடுத்தா ரென்று வெஸ்லி ஐயர் எண்ணி இது நல்ல காரியமென்று சொல்லி அவர்களுக்குத்தரவு கொடுக்கிறதை யநேகர் கண்டு குருப்பட்ட மடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் பிரசங்கம் பண்ணலாமா வென்று சொல்லி விசனப் பட்டார்கள். வெஸ்லி ஐயரோ வெனில் பராபரன் தாமே ஒரு மனிதனைத் தம் ஊழியத்துக்குத் தெரிந்து கொண்டால் நான் பராபரனை எதிர்த்து நிற்கக் கூடுமாவென்று மாறுத்தரஞ் சொல்லித் தேவ பக்தியுள்ள அனேகருக்குப் பிரசங்கிக்க உத்தரவு கொடுத்து வந்தார்."

“வெஸ்லி என்பவரும் அவருக் குதவியாகிய பிரசங்கிகளும் மிகவுந் துன்பப்பட்டார்கள். எப்படியெனில் துஷ்ட ஜனங்களடிக்கடி எழும்பி அவர்களைக் கல்லெறிந்தும் அடித்துஞ் சிறைச் சாலையிலே வைத்துத் துன்பப்படுத்தினார்கள்.

وو

“1788-ஆம் வருஷத்திலே சார்லஸ் வெஸ்லி என்பவர் மரண மடைந்தார். யோவான் வெஸ்லி யென்பவரும் 1791-ஆம் வருஷத்திலே மரணமடைந்தார். அவர்களுடைய சரித்திரத்தை விஸ்தாரமா யெழுத வேண்டுமானால் அதிக விரிவாகும்.”

“ஆனால் மேற்சொன்ன விசேஷங்களைப் பார்த்தால் அவர்கள் அதிக உண்மையும் உறுதியுமுள்ளவர்களென் றறியலாமே. வெஸ்லி யையர் மரணமடைந்தது முதலிதுவரைக்கு மிந்தச் சபை எங்கும் பரவி மிகவும் பெருகி யிருக்கிறது.’

""

9