உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

(முதற்பதிப்பு)

தமிழ்மொழி வளர்ச்சிபெற்ற முழு வரலாற்றையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு நெடுநாளாக உண்டு. ஆகையால், சமயம் வாய்த்தபோதெல்லாம் அத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தேன். இவ்வாறிருக்குங்கால், 1934 -ஆம் ஆண்டின் கடைசியில், வித்துவான் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள், M.A., B.L., சென்னையிற் கூட்டிய தமிழ் மாநாட்டில், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராகிய திரு. ச.த. சற்குணர் அவர்கள், B.A., “கிறித்துவமும் தமிழும்” என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதனைக் கேட்டபோது, தமிழ்மொழிச் சரித்திர ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்திநின்ற எனக்குப் புதியதோர் ஊக்கம் உண்டாயிற்று. கிறித்துவ சமயத்தவரால் தமிழ்மொழி அடைந்த நன்மைகளைக் கூறும் தமிழ்நூல் இதுகாறும் இல்லாமையால், முதலில் இதனை எழுதுவது தான் நலம் எனக்கருதி, இத்துறையில் என் கருத்தைச் செலுத்தி ஆராய்ச்சிசெய்யத் தொடங்கினேன். இதனிடையில் 1935 -ஆம் ஆண்டின் கடைசியில், இலங்கை திருமிகு. விபுலாநந்த சுவாமிகள், B.Sc., (London), சென்னைக்கு வந்திருந்தபொழுது, அவர்களிடம் எனது ஆராய்ச்சியைத் தெரிவித்தேன். சுவாமிகள், இது அவசியம் எழுதவேண்டிய பகுதிதான் என்று தெரிவித்து, இவ்வாராய்ச்சி சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதுவே இப்புத்தகம் எழுதப்பட்டதன் வரலாறு. இந்நூலிலுள்ள குற்றங்களை நீக்கிக் குணங்களையே கொள்ளும்படி பெரியோரை வேண்டுகிறேன்.

இந்நூலுக்கு முகவுரை எழுதியருளுமாறு இலங்கை திருமிகு. விபுலாநந்த சுவாமிகளைக் கேட்டுக் கொண்டேன். சுவாமிகள் அன்புடன் எழுதியருளினார்கள். இதற்கிடையில் புதிதொரு யோசனை தோன்றியது. தமிழ் இலங்கைக்கும் தமிழ் இந்தியாவுக்கும் தமிழ்த்