உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

தலைமை பூண்டு விளங்கும் திருமிகு. சுவாமிகள் அருளிய முகவுரை யொன்றே சாலும் என்றாலும், இந்நூல் இந்து உலகத்துக்கு மட்டுமன்றி, கிறித்துவ உலகத்துக்கும் உரியதாகலின், கிறித்துவத் தமிழறிஞரின் முகவுரையும் இந்நூலுக்கு அவசியம் எனத் தோன்றியது. கிறித்துவ மதத்தில் கத்தோலிக், புரொட்டஸ்டெண்டு என்னு இருபிரிவுகள் இருப்பதால், அவ்விரு பிரிவுகளின் சார்பாக இரண்டு தமிழ்ப் பெரியோர்களை முகவுரை எழுதியுதவுமாறு கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளுக் கிணங்கி, மேல் நாட்டு மொழிகள் கீழ்நாட்டு மொழிகள் பலவற்றில் புலமை வாய்ந்து, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி செய்துவந்த பெரியார், யாழ்ப்பாணத்து நல்லூர் உயர்திரு. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள், O.M.I., ஒரு நூன்முகம் எழுதி அருளினார்கள். அவ்வாறே, எனது வேண்டுகோளுக்கிணங்கி, தங்கள் உத்தியோக காலம் போக மிகுதியுள்ள காலமெல்லாம், தனிப்பட்ட முறையில், யாதொரு ஊதியமும் கருதாமல் மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ்சொல்லி, அவர்களைச் சிறந்த தமிழ்ப்புலவராக விளங்கச் செய்துவருகிற நற்குணப் பெரியார், சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. ச.த. சற்குணர் அவர்கள், B.A., ஆங்கில முகவுரை எழுதியருளினார்கள். ஆகவே, இந்நூல் மூன்று முகவுரைகளுடன் வெசளிவருகிறது. இந்த முகவுரைகளை எழுதியருளிய மூன்று பெரியார்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனம் உரியதாகும்.

இந்நூலிற் சேர்ப்பதற்காக, திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள், டாக்டர் ஜி.யூ. போப் ஐயர், டாக்டர் கால்ட்வெல் ஐயர், படங்களைக் கொடுத்துதவியதற்காக அவர்களுக்கும் எனது வந்தனம் உரியதாகும்.

மயிலாப்பூர்,

சென்னை, 24-11-36.

மயிலை சீனி. வேங்கடசாமி