உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

(நான்காம்பதிப்பு)

கிறித்துவமும் தமிழும் என்னும் இந்நூல் இப்போது நான்காம் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் பெர்ஸிவல் ஐயர், தெய்லர் ஐயர், பவுரீ சையர், கிளார்க் ஐயர், ராட்லர் ஐயர், உவின்ஸ்லோ ஐயர், துரு ஐயர், பவர் ஐயர் என்பவர்களைப் பற்றிய சிறுகுறிப்பும், எகர, ஒகர எழுத்துக்களைப் பற்றிய பின்னிணைப்பும் புதிதாகச் சேர்க்கப் பட்டுள்ளன.

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார், இந்நான்காம் பதிப்பை நல்ல முறையில் அச்சிட்டு வெளிப்படுத்தியதற்காக அவர்களுக்கு எனது வந்தனத்தைத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

மயிலாப்பூர்,

சென்னை-4,

20-5-55.

மயிலை சீனி. வேங்கடசாமி