உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை II

ஒருகாலம் மிகச் சீர்திருத்தம் அடைந்து முழுஉலகத்தின் சீர்திருத்தத்துக்கும் மேல்வரிச் சட்டமாய்த் திகழ்ந்திருந்த இந்தியாவின் மகாராகிய நாம், இடைக்காலத்தில் அச் சீர்திருத்தத்தை ஒருபுடை இழந்துபோயினோம். எமக்கு வெகுகாலத்தின் பின்னர் நாகரிகம் பெற்றோராகிய ஐரோப்பியரே, நாம் பல துறைகளின் மழுங்க விட்டிருந்த நாகரிகத்தை மீண்டும் அடைய, எமக்குக் கடவுள் கடாட்சத்தால் துணைசெய்வோரானார்கள். இவற்றுள், தமிழ் வளர்ச்சிக்கு மிக்க உபகாரமான அச்சியந்திர உபாயத்தை எம் நாட்டில் வருவித்தது அன்னோர் செய்த நன்றிகளுள் ஒன்றாம். தமிழில் தனி வான நூல்களை ஆக்கும் இயக்கத்தைத் தொடக்கிவிட்டவரும், நெடுங்கணக்கு முறையாய்ச் சொற்களின் அர்த்தத்தை விளக்கும் வனப்பு வாய்ந்த தமிழ் அகராதியைச் செய்து தந்தவரும் ஐரோப்பிய குருமாரே. விஞ்ஞானத்துறைகளிற் சில நூல்களை முதன் முதல் தமிழில் இயற்றினோரும், தமிழரின் கல்வியை விருத்தியாக்கும் பொருட்டு ஆங்கில பாடசாலைகளைத் தாபித்தோரும், அவற்றின் மூலமாய்ப் பல கலைகளுக்கு உரிய நூல்களைத் தமிழில் இயற்றியும் இயற்றுவித்தும் தமிழ் முன்னேற்றத்திற்குப் பேருதவி செய்தோரும் ஐரோப்பியக் கிறித்துவ சமய குரவரே. முன்னாளில் சமணப் பெரியோர் தமிழிற்குத் திருக்குறள், சீவகசிந்தாமணி ஆகிய செந்தமிழ் நூல்களை உதவியதுபோல, பின்னாளில் தேம்பாவணி ஆகிய பத்திய நூல்களை உதவியவரும் ஓர் ஐரோப்பிய குரவரே. இத் தமிழ்வல்லுநர்களைப் பின் தொடர்ந்து நம் நாட்டுக் கிறித்துவர்களும், அவ்வக் காலத்தே தமிழின் முன்னேற்றத்துக்கு உரிய பல தொண்டுகள் செய்துள்ளனர்.

இவ்வாறு, ஐரோப்பியரும் தமிழ்நாட்டவருமான கிறித்தவர் களால் தமிழும் தமிழுலகும் பெற்றுக்கொண்ட பேருபகாரங்களைச் சுருக்கமாய்க் கூறுவதாய், இளைஞரும் கிரகித்துக்கொள்ளத்தக்க பெற்றியான தமிழ்நடை பொருந்தியதாய் விளங்குகின்ற “கிறித்துவமும் தமிழும்” எனப் பெயர் சூடிய நூலைப் பார்த்து ஆனந்த