உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

35

உணர்ச்சியை அளித்தது. ஏனைய ஐரோப்பிய சாதியாரும் இந்தியா தேசத்துக்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க ஊக்கங்கொண்டு முயற்சி செய்தார்கள். இவ்வாறு ஊக்கங்கொண்டவர்களில் போர்ச்சுகல் தேசத்தரசனும் ஒருவன். எமானுயெசி என்னும் பெயருள்ள அந்த அரசன் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக் கொண்டு கிழக்கு முகமாகப் பிரயாணம் செய்தால், இந்தியா தேசம் போய்ச் சேரலாம் என்று நம்பிக்கை கொண்டவன். ஆகையால், அவ்வழியாகச் சென்று இந்தியா தேசத்தைக் கண்டுபிடிக்கும்படி வாஸ்கோ-டா-காமா என்பவரை அனுப்பினான். வாஸ்கோ-டா-காமா போர்ச்சுக்கல் தேசத்துத் துறைமுகப்பட்டினமாகிய லிஸ்பன் என்னும் பட்டினத்தை விட்டு 1497 ஆம் வருசம் சூலை மாதம் 9ஆம் நாள் புறப்பட்டுக் கடல் வழியாகச் சென்றபோது, எதிர்காற்றில் அகப்பட்டு அனேக இடர் இழிப்புகளுக் குட்பட்டார். ஆனாலும், மனந் தளராமல் மேன்மேலும் கப்பலை யோட்டிக் கொண்டு, ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கோடியாகிய நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கடந்து, அக் கண்டத்தின் கிழக்குக் கரையோரமாகப் பிரயாணம் செய்து, கடைசியில் மிலாண்டா' என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்தார். அது அக் காலத்தில் பேர் பெற்ற துறைமுகப்பட்டினம். ஆகையால், இந்தியாவிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்திருந்தன. வாஸ்கோ-டா-காமா அங்கிருந்த ஒரு முகம்மதிய மாலுமியை இந்தியா தேசத்துக்கு வழி காட்டும்படி தம்முடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, அந்த முகம்மதிய மாலுமியின் உதவியால், கி.பி. 1498-ஆம் வருசம் மே மாதம் 22ஆம் நாள் மலையாளக்கரையில் உள்ள கள்ளிக் கோட்டை என்னும் பட்டினத்தை அடைந்தார். யவனருக்குப் பிறகு வாணிபத்தின் பொருட்டு இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஐரோப்பியர் இவர் தாம். பிறகு, வாஸ்கோ-டா-காமா கள்ளிக்கோட்டையை அரசாண்டிருந்த சாமுத்திரி அரசனைக் கண்டு பேசி, போர்ச்சுகல் தேசத்தார் கள்ளிக்கோட்டையில் வர்த்தகம் செய்ய அவ்வரசனிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, மீண்டும் தம் ஊருக்குச் சென்று, தாம் இந்தியாவைக் கண்டுபிடித்த மகிழ்வுச் செய்தியைத் தம்முடைய அரசனுக்குத் தெரிவித்தார். போர்ச்சுகல் தேசத்தரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இந்தியா தேசத்துடன் வர்த்தகம் செய்வதற்காகவும், கூடுமானால், அத் தேசத்தை தன் ஆட்சிக்குட்படுத்துவதற்காகவும் சில கப்பல்களை ஆயத்தம் செய்து, பீட்ரோ ஆல்வாரெஸ் காப்ரால்" என்பவர் தலைமையிற் பல போர்ச்சுகீசியரை அனுப்பினான். இந்தக் காப்ரால்

8