உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

என்னும் தலைவர் கப்பலைச் செலுத்திக்கொண்டு போகிறபோது. ஆப்பிரிக்காக் கண்டத்தின் கரையோரமாகச் சென்றால், எதிர்காற்றில் அகப்பட்டு வருந்தவேண்டியிருக்கும் என்று நினைத்து, அக்கண்டத் துக்கு மேற்கே அதிக தூரமாய்க் கடலிற் போய்க்கொண்டிருக்கையில், தென் அமெரிக்காவில் உள்ள, இப்போது பிரேசில்" என்று வழங்கப்படுகிற செழிப்பான தேசத்தில் தற்செயலாகப் போய்ச் சேர்ந்தார். தாம் போகக் கருதி வந்த இந்தியா தேசம் செல்லாமல் தற்செயலாய் வேறு ஒரு புதிய தேசத்திற் சென்றதை அறிந்து வியப்புற்று, அவர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இந்தியா தேசம் வந்து சேர்ந்தார். பிரேசில் தேசத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும்போது அங்கிருந்து சில பழச் செடிகளைக் கொண்டு வந்து இந்தியாவிற் பரவச் செய்தார். அவர் கொண்டு வந்தவை மிளகாய், முந்திரிக்கொட்டை, கொய்யாப்பழம், அனாசிப் பழம், சீத்தாப்பழம், பப்பாளிப்பழம் முதலியவை. இப்பழச்செடிகள் இவர் கொண்டு வருவதற்கு முன்பு நமது நாட்டிலில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டின் கடைசியில் நமது நாட்டிற்கு வந்த பரங்கியர் (போர்ச்சுகீசியருக்குப் "பறங்கியர்” என்று பெயர்) கொச்சி, கள்ளிக்கோட்டை, கோவா முதலிய கடற்கரைப் பட்டினங்களில் அமர்ந்து வாணிகம் செய்யத் தொடங்கினார்கள். இவர்களுக்கு முன் தனி உரிமையாய் வாணிகம் செய்திருந்த முகம்மதியருக்குப் பறங்கியர் வந்து வாணிகம் செய்வது பிடிக்க வில்லை. இதனால் பறங்கியருக்கும் முகம்மதியருக்கும் சில சண்டைகள் நடந்தன. அச்சண்டைகளிற் பறங்கியர் வெற்றி பெற்று, முகம்மதியரை அடக்கி, அரபிக்கடலைத் தங்கள் ஆட்சியிற் கொண்டுவந்தார்கள். அதுமுதல் சுமார் ஒரு நூற்றாண்டு வரையில் பறங்கியர்கள் இந்தியா, இலங்கை முதலிய கீழைத் தேசங்களில் வாணிகம் செய்துவந்தார்கள். இவர்கள் வாணிகம் செய்வதோடு மட்டும் நில்லாமல், கிறித்துவ மதத்தைப் பரவச் செய்யவும் பாடுபட்டார்கள். ஏசுவின் சபைப் பாதிரிமார்களைக் கொண்டு வந்து, பெருந்தொகையான இந்துக்களைக் கிறித்தவராக்கினார்கள். சவேரியார், தத்துவபோதக சுவாமி, ஜான்-டி-பிரிட் டோ, வீரமா முனிவர் முதலிய பாதிரிமார் இவர்கள் அழைத்துவந்த ஏசுவின் சபையைச் சேர்ந்த துறவிகளாவர். இதுவுமன்றி, பறங்கியர் தங்கள் வாணிபப் பட்டினங்களைக் காவல்புரியும் பொருட்டு, பறங்கிப் போர் வீரர்களையும் கொண்டுவந்திருந்தார்கள். இப்போர்வீரர்கள் இந்தியப்