உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

66

கிறித்துவமும் தமிழும்

45

"இலக்கண இலக்கிய கணித பூகோள ககோளாதி நூல்களை யெல்லாம், இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கிலீஷ்காரர் களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையோர்களும், செய்யுளில் இயற்றிக் கற்பிப்பதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக்கொண்டு வருகின்றனர். அதனால், அக் கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர்.

66

இத்தேசத்தார் அந்நூல்களை யெல்லாம் செய்யுளிலே செய்து அவற்றிற்குத் திரிசொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர். இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றலன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடு நாள் செல்லுகின்றது. செல்லவே, பல நூல்களைக் கற்றுணர்ந்து எத்தொழில்களையுஞ் செய்யத்தக்கவர்களாவது அரிதாம்.

66

இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ் நாட் படாமற் சில நாட்களில் அப் பல நூல்களையும் கற்றறிந்து எத் தொழில்களையும் செய்யத்தக்க வல்லமை அடைவதற்கு, அந் நூல்களையெல்லாம் உலகவழக்கியற் சொற்களால் உரைவசனமாகத் தெரிவுறச் செய்து கல்விச்சாலைகளிலே உபயோகமுறும் படி செய்தல் நன்று...

وو

மேலே காட்டிய மேற்கோள்களினால், நாடு நாகரிகம் பெற்று நலமடைவதற்கு உரைநடை நூல்களே பேருதவியாயிருக்கின்றன என்பதும், மேலைத்தேசங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்றுத் திகழ்வதற்கு அந் நாடுகளில் வசன நூல்கள் வழக்காற்றிலிருந்து வந்ததும் ஒரு காரணம் என்பதும் தெளிவாகின்றன. இதனால், உரைநடை நூல்களின் பயன் நன்கு தெளிவாகிறது, இனி, தமிழ் மொழியில் உரைநடை நூல் உண்டான வரலாற்றினை ஆராய்வோம்.

66

எத்தொழிலும் பழக்கத்தினாற் சிறப்படைகிறது. இக் கருத்துப் பற்றியே, சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்னும் ஆன்றோர் மொழி எழுந்தது. இப்பழமொழி உரை நடைக்கும் பொருந்தியதே. பல்லாண்டு பல்லாண்டுகளாகத் தமிழர் உரைநடை நூல் எழுதாமலே இருந்து விட்டபடியால், காலப் போக்கில் உரைநடை