உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

கையாள முடியாத

அச்சுப் புத்தகம் வருவதற்கு முன்னே, நம் நாட்டுப் பொது மக்களும் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வசதியில்லாமல் இருந்தனர். ஒரு சிறு தொகையினராகிய படித்த கூட்டத்தார் பனை யோலைகளில் நூல்களை எழுதி வந்தனர். இருப்பெழுத்தாணி கொண்டு பனையோலைகளில் நூல்களை எழுதிமுடிக்கத் தேக உழைப்பும், காலச் செலவும் பொருட்செலவும் அதிகமாக ஏற்பட்டது ஒருபக்கமிருக்க, அவற்றைப் படிப்பதும் கடினமாகவிருந்தது. ஏ னென்றால், சுவடிகளை வசதியாகக் வருத்தத்தோடு படிக்க முயன்றாலும், ஏடுகளில் மூலம் இன்னது, உரை இன்னது என்பது தெரியாமலும், புள்ளி பெறவேண்டிய எழுத்துக்கள் புள்ளிபெறாமலும் ஒரே எழுத்து மயமாகக் காணப்படும். எடுத்துக் காட்டாக கள்வர் என்று ஏட்டில் எழுதப்பட்டிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதைக் களவா என்று படிப்பதா கள்வர் என்று படிப்பதா என்கிற ஐயம் விரைவில் தீராது. இவ்விதம் ஏடுகளில் மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறாதிருப்பதினால் உண்டாகும் ஐயப்பாடுகள் ஒருபுறமிருக்க முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப் புள்ளிகளும் காணப்படா. இவற்றை எல்லாம்விட மிகவும் வருத்தந் தரும் வேறொன்று என்னவென்றால், ஓலைச்சுவடிகளிற் பல வேறு பாடுகளும் இடைச்செருகல்களும் காணப்படுவது தான். அச்சுப் புத்தங்களிலோ இடைச்செருகலும் பாட வேறுபாடுகளும் நுழைவதற் கிடமில்லை. நுழைக்கவும் முடியாது. ஓலைச்சுவடிகளில் இவை இலேசாக நுழைவதற்கு இடமுண்டு. எப்படி என்றால், ஓர் ஆசிரியன் ஒரு நூலை எழுதினானென்றால், அந்நூலை மற்றவர்கள் படி எழுதிக்கொள்வது பண்டைய வழக்கம். இப்படிப் படிகள் எழுதும்போது, அவற்றை எழுதுவோர்க்குத் தெரிந்தோ தெரியா மலோ பாடவேறுபாடு ஏற்படுவதும் உண்டு. பாடவேறுபாடுகளினால் நுலாசிரியன் கருத்துக்கு மாறுபட்ட கருத்துக்களும் அந்நூலூட் புகுந்துவிடுகின்றன. ஏடெழுதுவோரின் மனப்பான்மையினாலும், கொள்கை வேறுபாட்டினாலும் மற்றும் பிற காரணங்களாலும், பாடவேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதை ஏட்டுச் சுவடிகளில்தான் காணமுடியும். இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள கம்பராமாயண ஏட்டுப்படிகளைக் கொண்டு வந்து அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்ப்போமானால், ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறு பாட வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். இவ்வகையே மற்ற நூற்சுவடிகளையும் ஒன்றோ டொன்று ஒப்பிட்டுப் பார்ப்போமானால்,