உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

அண்ணாமலை அரசரின் ஆர்வம்

மார் வெ

எட்டலும்

213

பெயர் பெற்று விளங்குகிறது. 'தமிழ் பல்கலைக் கழகம்' என்று தமிழர் ஆர்வத்தோடு பெருமையோடு செம்மாந்து இறுமாந்து பேசும் உயர்நிலையைப் பெற்றுள்ளது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் . இந்த உயர்நிலை என்றென்றும் ஓங்கி உயர்ந்து நிற்பதாக.

முத்தமிழ்க் கலையில் அடுத்தபடியாக இருப்பது இசைத்தமிழ் என்னும் இசைக்கலை. முற்காலத்தில் தமிழகத்திலே உயர்நிலை பெற்றிருந்த இசைத்தமிழ் அண்மைக் காலத்தில் சிறப்புக் குன்றிப் போற்றுவாரற்றுப் புறக்கணிக்கப்பட்டு மறைந்து போகும் நிலையி லிருந்தது. இசைத்தமிழ் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது. இந்த நிலையிலே முத்தமிழ் வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழ் இசைச்சங்கத்தை நிறுவி இசைத்தமிழை வளர்த்தார்கள். இசைத் தமிழை வளர்ப்பதற்குத் தமிழ் இசை இயக்கம் ஒன்றைத் தொடங்கி நாடெங்கும் பிரசாரம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. செட்டி நாட்டு வள்ளல் சற்றும் பின் வாங்காமல் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற நல்லாரின் துணையுடன் தமிழ் இசை இயக்கத்தையும் தமிழ் இசைச்சங்கத்தையும் போற்றி வளர்த்து நிலை நிறுத்தினார்கள். இவருடைய அரிய பெரிய முயற்சியினாலும் வள்ளற்றன்மையினாலும் இசைத்தமிழ்க் கலை இன்று சீரும் சிறப்பும் அடைந்து செம்மாந்து அரியணையில் வீற்றிருக்கின்றது.