உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

சென்னை மாநகரத்தில் அழகுடன் விளங்கும் அண்ணாமலை மன்றம் இசைத் தமிழின் தாயகமாக மிளிர்கின்றது. இங்கு இசைச் செல்வி வாழ்கிறாள். இச்சங்கம் இசைத்தமிழை எங்கும் பரப்பி வருகிறது. தேவாரம் திருவாய்மொழி போன்ற பழம் பண் ஆராய்ச்சிகளும் இங்கு ஆராயப்படுகின்றன. தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் இசைக் கல்லூரிகளும் நடைபெறுகின்றன. இவ்வாறெல்லாம் இசைத் தமிழை வளர்த்த பெருமை அண்ணாமலை வள்ளலாருக்கே உரியதாகும்.

மூன்றாவது கலையாகிய நாடகத்தமிழை வளர்ப்பதற்கு அடி கோலியவரும் அண்ணாமலை வள்ளலாரேயாவார்கள். இசைத் தமிழுடன் தொடர்புடையது நாடகத்தமிழ். பரத நாட்டியமும் நாடகத்தில் அடங்கும். பரத நாட்டியத்தையும் நாடகக் கலைகளையும் தமிழ் இசைச் சங்கம் வளர்த்து வருகிறது. அண்ணாமலை மன்றத்தில் இசைத் தமிழோடு நாட்டியக் கலைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு முத்தமிழ்க் கலைகளைப் போற்றி வளர்த்துப் புத்துயிர் கொடுத்த பெருமையும் சிறப்பும் அண்ணாமலைச் செட்டியாருக்கே உரியதாகும். ஆகவே, அவர் தமிழ் நாட்டுப் பெரியவர்களில் ஒருவரன்றோ? 'செயற்கரிய செய்வார் பெரியர்'. பெரியார் அண்ணா மலைச் செட்டியார் கலை வள்ளலாகத் திகழ்ந்தார். முத்தமிழை வளர்த்த அவர் முத்தமிழ் வள்ளல் என்னும் சிறப்புப் பெயருக்குரியவராவார். செட்டி நாட்டரசர் முத்தமிழ் வள்ளல் அண்ணாமலைப் பெருமானடிகள் புகழ் வாழ்க.

அழகப்ப வள்ளல் முதலிய வேறு பெரியார்கள் பலர், நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபாக இருந்தனர் என்பதைப் பலரும் அறிவர். அவர்களைப் பற்றியெல்லாம் எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.

ப்பெரியார்கள் அனைத்துச் செட்டியார் மரபுக்குப் பெரும் புகழைத் தந்தனர் என்பது ஓர் உண்மைதான். அதைவிட இன்னொரு பெரிய உண்மை என்னவென்றால், அவர்கள் தமிழ் நாட்டுக்கும் பெரும் புகழைத் தந்துள்ளனர் என்பதே.

கடைசியாக நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு ஒரு வேண்டு கோள். காலம் விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது. உலகம் வேக மாக மாறிக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் பெரிய உலகத்தை மிகச் சிறியதாகச் சுருக்கிவிட்டது. உலகத்திலே பெரிய மாறுதல்கள் நம்மை அறியாமலே நேரிடுகின்றன. நாட்டுக் கோட்டை நகரத்துச்