உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

39

என்னும் குறளில் துறவிகள், விருந்தினர், சுற்றத்தார், தான் (இல்லறத் தான்) என்னும் நான்கு பேரும் உலகத்தில் வாழ்பவர்களாய் உணவையுண்டு வாழ வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே, ஐந்து பேர்களில் ஒருவராகக் கூறப்பட்ட தென்புலத்தாரும் உலகத்திலே உயிர் வாழ்பவர்களாய், இல்லறத்தான் கொடுக்கும் உணவை உட்கொண்டு உயிர் வாழ வேண்டியவர்களாகத்தான் இருக்கவேண்டும். தென்புலத்தார் என்னும் சொல்லுக்கு உண்மையான பொருள் இக் காலத்தில் மறைந்துவிட்டது என்று கூறுகிறோம். அறிஞர்கள் ஆராய்வார்களானால் இச்சொல்லின் உண்மைப் பொருள் விளங்கக் கூடும். நிற்க.

இதுகாறும் இக்கட்டுரையில் ஆராய்ந்தறியப்பட்ட செய்தி என்னவென்றால், கடவுள் என்னும் சொல்லுக்குத் துறந்த முனிவர் என்னும் பொருள் உண்டென்பதும், இந்தப் பொருள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்துவிட்டதென்பதும், கடவுள் என்னும் சொல்லைப் போலவே தெய்வம் என்னும் சொல்லுக்கும் துறவிகள் முனிவர்கள் என்னும் பொருள் உண்டென்பதும், இந்தப் பொருளும் பிற்காலத்தில் வழக்கிழந்துவிட்டதென்பதும், கடவுள் என்னும் முழுமுதற் பரம்பொருளுக்குப் பெயராக மட்டும் இக்காலத்தில் வழங்குகிறது என்பதும் ஆகும்.

1.

அடிக் குறிப்புகள்

சிலம்பு - மதுரைக் காண்டம் - காடுகாண் காதை.

-

2. சிலம்பு - ஊர்காண் காதை : 39-42.

3.

சிலம்பு - நீர்ப்படை : 98 – 100. அஞ்.2.

4. பெருங்கதை - இலாவண காண்டம் - 11 : 149 - 150.

- ம்

5. பெருங்கதை - மகத காண்டம் - 4 : 25-27.

6. பெருங்கதை - வத்தவ காண்டம் - வினாவிறுத்தது : 85-91. 7. பெருங்கதை - வத்தவகாண்டம் - 17: 7-10.

8. உயுத்த காண்டம் - இந்திரசித்து வதைப் படலம்.

9.

திருவீரட்டானம் - ஏழைத்தாண்டகம் :