உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து

இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்கு2

என்பது அச் செய்யுளடி.

51

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் “கோடு கூடு மதியம்” என்னும் சொற்றொடர் வருகிறது.3 இதற்கும் பழைய உரை யாசிரியர், "கோடு கூடுதலையுடைய உவா மதியம்” என்று உரை எழுதுகிறார்.

பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையின் முகம் முழு நிலாப் போன்றிருந்தது என்று கூறுகிற ஆசிரியர், உவாவுறு மதிமுகம் என்று கூறுகிறார். முழு நிலா நாளில் கடலில் அலை பொங்கி ஓசை அதிகப்படும் என்று கூறுகிறவர் உவாக்கடலொலி என்றும் கூறுகிறார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாள் இந்திர விழா நடந்தபிறகு, அடுத்த நாள் உவாமதி நாளாகையால், நகர மக்கள் கடற்கரைக்குச் சென்றார்கள். அவர்களோடு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் சென்றார்கள். இச்செய்தியைக் கூறுகிற இளங்கோ அடிகள், முழுநிலா நாளை “உருகெழுமூது உவவுத்தலை வந்தென” என்று கூறுகிறார். இதற்குப் பழைய அரும்பதவுரையாசிரியர், உவவுத்தலை-உவவுக்காலம் என்று உரை எழுதுகிறார். அடியார்க்கு நல்லாரும் இவ்விதமே உரை எழுதுகிறார். இவர்கள் உவா என்னும் சொல்லையே வழங்கியிருப்பது காண்க.

சாசனங்களிலும் உவா என்னுஞ் சொல் வழங்கப்பட்டுள்ளது. செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா, செய்யூரில் உள்ள வால்மீகநாதர் கோயில் முன் மண்டபச்சுவரில் உள்ள கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது :

"இக்கோயிலில் திருமாளிகைப் பிள்ளையார்க்கு அமாவாசி பன்னிரெண்டு இடை உவாப் பன்னிரண்டும் ... ... பிள்ளையாரை அமுது செய்விக்கைக்கு”4 என்றும்,

“பிரட்டாதி உவா முதலாக மார்கழி உவா வரை நாலிடை உவா நாயகரை கிராமபிரதக்ஷணம் எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு”5 என்றும்,