உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடப்பெயர் பொருட்பெயர் ஆன கதை

1. பைபிள்

பைபிள் என்றால் கிறிஸ்துவ சமயத்தவரின் வேத புத்தகம் என்பதை எல்லோரும் அறிவர். பைபிள் என்னும் சொல், இக்காலத்தில் கிறிஸ்துவ சமய வேத புத்தகத்திற்குப் பெயராக வழங்குகிற போதிலும், ஆதி காலத்தில் இச்சொல் இந்தப்பொருளில் வழங்கவில்லை. பண்டைக் காலத்தில் பைபிள் என்னும் சொல், எல்லாப் புத்தகங் களுக்கும் பொதுப் பெயராக வழங்கி வந்தது. புத்தகம் என்னும் அர்த்தத்தில் பொதுப் பெயராக வழங்கிய இந்தச் சொல், பிற்காலத்தில் கிறிஸ்துவ வேத புத்தகத்திற்கு மட்டும் சிறப்புப் பெயராக வழங்கப்பட்டு இன்றளவும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

பைபிள் என்னும் சொல்லின் கதை இதனோடு நின்று விட வில்லை; இன்னும் நீண்டு செல்லுகிறது. பைபிள் என்னும் சொல் பிபிலா என்னும் சொல்லிலிருந்து உண்டாயிற்று. பிபிலா என்னுஞ் சொல்லோ பீப்லாஸ் என்னும் சொல்லிலிருந்து தோன்றியது. பீப்லாஸ் என்பது ஒரு துறைமுகப்பட்டினத்தின் பெயர். எனவே, பீப்லாஸ் என்னும் துறைமுகப் பட்டினத்தின் பெயர் பிபிலா என்று மாறி, பிறகு பைபிள் என்று புத்தகங்களுக்குப் பொதுப் பெயராக மாறி. கடைசியில் கிறிஸ்துவ வேதபுத்தகத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது என்று கூறினால், முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிபோடுகிறது போன்ற கட்டுக்கதை என்று நீங்கள் நினைப்பீர்கள். உண்மையில் இது கட்டுக்கதை அன்று. சொல் ஆராய்ச்சி காட்டுகிற உண்மைச் செய்தியே. இதனை விளக்கிக் கூறுவோம்.

பண்டைக் காலத்தில், இக்காலத்தில் உள்ளது போல பேப்பர், பேனா என்னும் எழுதுகருவிகள் கிடையா. அந்தக் காலத்தில் இருந்த வெவ்வேறு நாட்டு மக்கள் வெவ்வேறு எழுது கருவிகளை வழங்கி வந்தார்கள். பாரத நாட்டிலிருந்த நம்முடைய முன்னோர்கள் பனை யேடுகளையும் எழுத்தாணிகளையும் எழுதுகருவிகளாகக் கொண் டிருந்தார்கள். சில நாட்டு மக்கள் மரப்பட்டைகளில் எழுதினார்கள். அசிரியா, பாபிலோனியா முதலிய நாடுகளில் இருந்தவர்கள் ஈரமான