உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

/87

களிமண் பலகைகளில் எழுத்துகளை எழுதி வைத்தார்கள். வேறுசில நாட்டினர் பதப்படுத்தப்பட்ட தோல்களை எழுதுகருவிகளாகக் கொண்டிருந்தார்கள். பண்டைக் காலத்து எகிப்து தேசத்து மக்கள் பேபரைஸ் என்னும் ஒருவகைக் கோரைப் புல்லின் பட்டையை எழுதுகருவியாகப் பயன்படுத்தினார்கள்.

"

பண்டைக் காலத்திலே வழங்கிய எழுதுகருவிகளில் எகிப்தியர் கையாண்ட பேபரைஸ் தாள்கள் எழுதுவதற்கும் புழங்குவதற்கும் வசதியாக இருந்தன. ஆகவே, பேபரைஸ் தாள்களை மற்ற நாட்டார் களும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்தக் காலத்திலிருந்த மக்கள், - மத்தியதரைக் கடலைச் சுற்றிலும் வாழ்ந்திருந்த பண்டைக் காலத்து மக்கள் – பேபரைஸ் தாள்களை எழுதுகருவிகளாக வழங்கத் தொடங்கினார்கள்.

எகிப்து தேசத்து நீலநதிக்கரை யோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் பேபரைஸ் என்னும் ஒருவகைக் கோரைப் புல் செழிப்பாக வும் ஏராளமாகவும் வளர்ந்தது. அவை பருத்துத் திரண்டு நீண்டு வளரும் இயல்புடையவை. அந்தப் பேபரைஸ் தண்டுகளை அரிந்து, நீளவாட்டத்தில் கீறி உள்ளிருக்கிற சடை போன்ற பொருளை அப்புறப் படுத்தி, மேல் பட்டையை விரித்துக் காயவைத்துப் பதப்படுத்துவார்கள். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பேபரைஸ் பட்டைகள், இக்காலத்துக் காகிதம்போல, அக்காலத்தில் எழுதுகருவியாக உபயோகப்பட்டன. எண்ணெய் விளக்கின் கரியிலிருந்து உண்டாக்கப்பட்டமையில், நாணல் குழாய்களினால் செய்யப்பட்ட பேனாக்களைக்கொண்டு பேபரைஸ் தாள்களில் எழுதினார்கள். இந்த எழுது கருவிதான் மேலே கூறியபடி, எகிப்து, கிரீக்கு முதலிய மத்தியதரைக்கடலைச் சூழ்ந்திருந்த நாடுகளில் உபயோகப்பட்டன.

அந்தக் காலத்தில் பினீஷியர் என்னும் ஒரு இனத்தார் கப்பல் வாணிகம் செய்வதில் பேர் பெற்றிருந்தார்கள். அவர்கள் மத்திய தரைக் கடலின் கிழக்குக்கரை நாடுகளில் குடியிருந்தார்கள். கடல் கடந்து போய் அயல்நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதில் திறமை வாய்ந்த பினீஷியருக்கு, அக்காலத்தில் முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது பீப்லாஸ் என்னும் துறைமுகப்பட்டினம். இந்தத் துறைமுகப்பட்டினம் அக்காலத்தில் இருந்த சைரியா தேசத்தின் முக்கிய பட்டினமாக இருந்தது. மத்தியத் தரைக்கடலின் கிழக்குக் கரையிலிருந்த