உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -19

கைவிரல்களில் பிடித்திருக்கிறார். ஏன்? இறைவன் அடைக்காய் அருந்தும் பழக்கம் உள்ளவரா, ஏன் கிளிக்கத்தியை ஏந்தியிருக்கிறார் என்று கேட்பீர்கள்.

இந்தப் புதுமையைப் பற்றி(அடைக்காய் வெட்டும் கிளிக்கத்தி தாண்டவ மூர்த்தியின் கையில் இருப்பது புதுமைதானே!) அருகில் இருந்த அருச்சகரைக் கேட்டேன். அதன் காரணம் தமக்குத் தெரியாது என்று கூறினார். சற்றுச் சிந்தித்துப் பார்த்தபோது அதன் கருத்து எனக்கு நன்றாக விளங்கிவிட்டது. உங்களுக்கு விளங்குகிறதா? சைவசித்தாந்த சாத்திரத்தை நுணுகி ஆராய்ந்தவருக்கு இதன் கருத்து நன்றாகப் புலனாகும்.

பதி, பசு, பாசம் என்னும் பொருள்கள், சைவ சித்தாந்தத்தின் படி அனாதியானவை; என்றும் அழியாதவை. பதியாகிய இறைவன் பாசத்துடன் கட்டுப்படாமல் எங்கும் பரவி ஆனந்த மயமாக இருக்கிறார். பசுவாகிய ஆன்மா, பாசமாகிய சடப்பொருளுடன் கலந்து துன்புறுகின்றது. இறைவன் தம்முடைய திருவருளினால், பாசத்துடன் கட்டுண்டு கிடக்கிற ஆன்மாவைப் பாசத்திலிருந்து விடுவித்து மோட்சம் அளிக்கிறார். அவ்வாறு விடுவிக்கிற போது பாசம் முழுவதும் அழிந்துவிடவில்லை. ஆன்மா விடுபடுகிற நிலையிலும் பாசம் அதனுடன் சிறிது பிணைந்து கிடக்கிறது.

பாசத்தின் செயல் ஆன்மாவில் நிகழாதபடி திரோபவம் செய்து தடுத்த இறைவன், ஆன்மாவைப் பாசத்திலிருந்து பிரித்து எடுக்கிறார். பாசம் அழியாத் தன்மையுடையது. திரோபவத்தில் பாசத்தின் ஆற்றல் அழிந்து அதன் முனைப்பு அடங்கிக் கிடக்கிறது. ஆனால், முற்றும் அழிந்து விடவில்லை. அந்த நிலையில் பக்குவம் அடைந்த ஆன்மாவைப் பாசம் பற்றிக் கொண்டு தொடராதபடி இறைவன் திருவருள் புரிகிறார். இந்த நிலையைத்தான் இத்தாண்டவ மூர்த்தத்தை, அமைத்த சிற்பாசாரியார் கிளிக் கத்தியைக் கையில் அமைத்துக் காட்டியிருக்கிறார். ஆன்மாவைப் பாசம் தொடாதபடி துண்டித்துவிட்டதாகக் குறிப்பிட்டுக் கிளிக்கத்தியைக் கையில் காட்டியிருக்கிறார். இதுவே இதன் சரியான கருத்து என்று தோன்றுகிறது.

மற்றொரு கையில் ஆடவல்லான் திரிசூலம் ஏந்தியிருக்கிறார். திரிசூலமானது ஆக்கல், காத்தல், அழித்தல் செயல்களைச் செய்கிற