உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

129

(ஆரணி, செனனி, இரோதயித்திரி என்னும்) மூன்று சக்திகளைக் குறிக்கிறது என்று முன்னமே கூறியுள்ளோம்.

இடது கை ஒன்றை உயர்த்தித் தூக்கி அகங்கையைக் கவிழ்த்துத் தூக்கிய திருவடிக்குக் (ஊர்த்துவ பாதத்திற்குக்) காப்பாக அமைத் திருக்கிறார். தூக்கிய திருவடியிலே வீடுபேறு பெற்ற ஆன்மா இருக்கிறது என்றும், அதை ஞானத்தைக் குறிக்கிற சடையுடன் பொருத்தியிருக்கிறார் என்றும் மேலே கூறினோம். அந்த வீடுபேறு பெற்ற ஆன்மாவுக்கு ஆசிகூறி வாழ்த்துவதுபோல இவர் தமது கையை உயர்த்தி ஆதரவு கொடுக்கிறார். மற்றோர் இடது கை கஜஹஸ்தமாக (வீசிய கையாக) அமைந்து ஊன்றிய பாதத்தைக் காட்டுகிறது.

6

மற்றோர் இடது கையில் தீச்சுடர் இருப்பதையும், அது விலகி யிருப்பதையும் முன்னமே கூறினோம். இன்னொரு கையில் சிவபெருமான் சிறிய பாம்பு ஒன்றை ஏந்தியிருக்கிறார். பாம்பு ஆன்மாவைக் குறிக்கிற அடையாளமாகும்.

இத்தனை சாத்திரக் கருத்துகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிற அழகான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தத்தை எழில் அமைந்த கலைப்பொருளாக அமைத்துக் கொடுத்த சிற்பாசிரியர் பெயர்கூடத் தெரியவில்லை! இத்தனை அழகும் சிறப்பும் வாய்ந்த இக்கலைச் செல்வத்தைப் பெற்றிருக்கிறோமே நாம் என்னும் உணர்வு நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.இச்சிற்பக் கலையின் எழிலைக் கண்டு கண்டு மகிழ்வோமாக. கலைச்செல்வருக்கு இக்காட்சி பெருவிருந்தாக இருக்கிறது. இதன் அமைப்பும் அழகும் புதுமை, புதுமை!

6

அடிக்குறிப்புகள்

1. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36.

2. இரத்தினசபாபதி துதி, சுநந்தர் உபதேசச் சருக்கம், 36.

3. சேடனுக்கு மால் உபதேசித்த சருக்கம், 17

4. திருவாலங்காட்டுப் புராணம்; சுந்தரர் உபதேசம், 87.

5. சுநந்தர் உபதேசச் சருக்கம், 36.

6. சிவஞான போதம்; திராவிட மாபாடியம் 2ஆம் சூத்திரம்.