உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஐஞ்செயலையும்

ஒருங்கே காட்டுகின்ற ஆனந்த தாண்டவம்

'குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போ மேனியில் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே

சிவபெருமான் ஐஞ்செயலையும் தனித்தனியே செய்தருளுகிற தாண்டவ உருவங்களை இதுகாறும் ஆராய்ந்தோம். இனி, ஐஞ்செய லையும் ஒருங்கே காட்டுகிற தாண்டவத்தை ஆராய்வோம்.

இந்தத் தாண்டவ மூர்த்தியை ஆனந்த தாண்டவர் என்றும், ஆடவல்ல நாயனார் என்றும் கூறுவது உண்டு. நாதாந்த நடனம் என்பதும் இதுவே. தில்லைப் பொன்னம்பலத்திலே சிவபெருமான் இந்தத் தாண்டவத்தைச் செய்தருளுவதாக நூல்கள் கூறுகின்றன. மார்கழித் திங்கள் திருவாதிரை நன்னாளில் இந்தத் தாண்டவத்தைக் காண்பது மிகச் சிறந்த பேறென்று கருதப்படுகிறது.

பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் செய்தருளினார் என்று புராணம் கூறுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐஞ்செயல்களும் இத்தாண்டவத்தில் ஒருங்கே நிகழ்கின்றன.

66

அரன் துடிதோற்றம், அமைப்பில் திதியாம், அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம், அரனுற் றணைப்பில் அமரும் திரோதாயி, அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே”

என்பது திருமூல நாயனார் அருளிய திருமந்திரம். இதையே மனவாசகங் கடந்தார்,