உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

மறைமொழி விளக்கம்

தாண்டவமூர்த்தி செய்யும் ஐந்தொழிலைக் குறிக்கின்ற ஐந்து மறைமொழி (மந்திரம்) உண்டு. அந்த மந்திரத்துக்குத் திருவைந் தெழுத்து என்றும், பஞ்சாட்சரம் என்றும் பெயர் கூறுவர்.

66

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப

என்பது தொல்காப்பிய இலக்கணச் சூத்திரம். சைவசமய சாத்திரத்தை நன்கு அறிந்த நிறைமொழி மாந்தர் அமைத்தவை திருவைந்தெழுத்து என்னும் மறைமொழி. அது ந-ம-சி-வா-ய என்பது. இந்த ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் தாண்டவமூர்த்தியின் ஒவ்வொரு செயலைக் குறிக்கின்றன. இதனால்தான் ஐந்தொழிலைச் செய்கிற சிவபெருமானுக்கு நமச்சிவாயன் என்னும் பெயர் ஏற்பட்டது. மாணிக்க வாசகர் தாம் அருளிச் செய்த சிவபுராணச் செய்யுளின் தொடக்கத்தில், “நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!”

66

என்று ஓதினார்.

திருநாவுக்கரசு நாயனாரும் “நமச்சிவாயப் பதிகம்” பாடினார் அப்பதிகத்தின் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் 'நமச்சிவாய' என்று திருவைந்தெழுத்தைக் கூறுகிறார்: கூறுகிறார்: 'நற்றுணையாவது நமச்சிவாயவே', ‘நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே', 'நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே', 'நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே', 'நல்லக விளக்கது நமச்சிவாயவே;'

66

பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை நண்ணி நின் றறுப்பது நமச்சிவாயவே

என்று அவர் அருளியிருக்கின்றார்.

99

நமச்சிவாய என்னும் மறைமொழியைச் சிவாயநம என்றும் கூறுவது உண்டு. நமசிவாய என்னும் மறைமொழியைவிடச் சிவாயநம என்னும் மந்திரமொழிதான் சிறந்த பலன் அளிக்கவல்லது என்று

மனவாசகங்கடந்தார் கூறுகிறார்.

66

சிவன், அருள், ஆவி, திரோதம், மலம்ஐந்தும்

அவனெழுத்து அஞ்சின் அடைவாம்- இவனின்று நம்முதலா ஓதில்அருள் நாடாது, நாடும்அருள்