உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

சிம்முதலா, ஓதுநீ சென்று

என்றும்,

66 சிட்டன்

சிவாய நமவென்னுங் திருவெழுத் தைஞ்சாலே

யவாயமற நின்றாடுவான்.

என்றும் அவர் கூறியுள்ளது காண்க.

133

மேலும், சிவாயநம என்னும் மந்திரத்தை நடராச மூர்த்தத்தில் அமைத்துக்காட்டி ஐஞ்செயல் தத்துவத்தை நன்கு விளக்குகிறார் மனவாசகங் கடந்தார். அவர் கூறுகிறார்:

66

“ சேர்க்குந் துடிசிகரம், சிக்கனவா வீசுகரம்,

ஆர்க்கும் யகரம் அபயகரம்;-பார்க்கிலிறைக்கு அங்கி நகரம், அடிக்கீழ் முயலகனார்

தங்கும் மகரமது தான்.

சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை நடராசப் பெருமான் செய்யும் ஐந்தொழிலுடன் பொருத்திக் காட்டி விளக்குவோம்.(படம்

காண்க).

உடுக்கையாகிய துடியை ஏந்திய கை சி என்னும் எழுத்தையும், வீசிய கரமாகிய கஜஹஸ்தம் வா என்னும் எழுத்தையும், அபயமுத்திரை யுள்ள கை ய என்னும் எழுத்தையும், தீச்சுடரை ஏந்திய கை ந என்னும் எழுத்தையும், முயலகன் ம என்னும் எழுத்தையும் குறிக்கின்றன.