உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

சிவகாம சுந்தரி

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

ஐஞ்செயலைப் பற்றிய பலவகையான தாண்டவ மூர்த்தங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். தாண்டவ மூர்த்தங்களைப் பற்றிய ஒரு முக்கியச் செய்தியைச் சொல்லாமலே விட்டுவைத்தோம்; அதனை இங்குக் கூற வேண்டியது முக்கியமாகும். அது சிவகாம சுந்தரி உருவத்தைப் பற்றியது.

உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கற்பித்தது போலவே, அவருடைய திருவருளைச் சிவகாம சுந்தரி உருவமாகப் பெரியோர் கற்பித்தார்கள். இறைவனுடைய அருட் சக்தியே சிவகாம சுந்தரி உருவமாகும். சிவகாம சுந்தரியாகிய அருட் சக்தியின் திருவருளின் பொருட்டே இறைவன் ஆன்மாக்களின் வீடுபேற்றுக்காகத் தாண்டவங் களைச் (ஐஞ்செயல்களைச்) செய்தருள்கிறார் என்று சாத்திரம் கூறுகிறது.

இறைவனை

ஐந்தொழில் செய்வித்து ஆன்மாக்களை உய்விக்கின்ற அருட்சக்தியாகிய சிவகாம சுந்தரியார், இறைவன் ஐஞ்செயல் தாண்டவங்களைச் செய்கிறபோது அவர் அருகில் இருந்து அத்தாண்டவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சாத்திரம் கூறுகிறது. ஆகவே, தாண்டவமூர்த்தியின் அருகிலே சிவகாம சுந்தரியின் உருவம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. நடராச மூர்த்தங்கள் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் அம்மூர்த்தத்தின் அருகில் சிவகாம சுந்தரி திருவுருவத்தைக் காண்கிறோம். சிவகாம சுந்தரி இல்லாமல் தாண்டவங்கள் நிகழ்வது இல்லை.

இந்நூலில் கூறப்பட்ட ஒவ்வொரு தாண்டவமூர்த்தியின் பக்கத்திலும் சிவகாமசுந்தரியின் உருவம் இருப்பதாக வாசகர்கள் கருத வேண்டும். அருட் சக்தியின் ஊக்குதலினாலேயே இறைவன் றைவன் ஐந் தொழில் தாண்டவம் செய்கிறார் என்னும் சாத்திரக் கருத்தை மறத்தல் ஆகாது. ஆகவே, தாண்டவ மூர்த்தத்தை வணங்குகிறவர் ஒவ்வொரு வரும் சிவகாம சுந்தரியையும் சேர்த்துத் தண்டவ மூர்த்தத்தை வணங்க வேண்டும் என்பது முறை. இறைவனின் தாண்டவங்களை அருகில் இருந்து கண்டுகொண்டிருக்கிற சிவகாம சுந்தரியின் உருவத்தைப் படத்தில் காண்க.

1. திருமந்திரம்.

அடிக்குறிப்புகள்

2. நக்கீரதேவர் அருளிய போற்றிக் கலிவெண்பா.