உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

137

அகழ்ந்தெடுக்கப்பட்டது. இச்சிற்பத்தில் திருவாசி, உதரபந்தனம், விரிந்தாடுகிற சடைப்புரிகள் முதலியன அடைந்து விட்டன. ஆயினும், இச்சிற்பத்தின் அழகு குறையவில்லை. இந்த அழகிய சிற்ப உருவத் தின் அமைப்பைக் காணும் மேல்நாட்டுக் கீழ்நாட்டுக் கலைவாணர்கள் அனைவரும் இதன் அழகைப் புகழ்ந்து பேசுகிறார்கள். உண்மை யாகவே கலையழகு நிரம்பியது இந்தச் சிற்பம். இதில் ஐயமில்லை. இச்சிற்ப உருவத்தின் சிறப்புகளை எழுதுவதைவிடக் கண்டுகளிப்பதே சிறப்புடைத்து. கலைவாணர்கள் கண்டு மகிழ்வார்களாக.

குறிப்பு:

நடராச உருவத்தை இன்னொருவிதமாகவும் அமைப்பது உண்டு. அதாவது ஊன்றிய வலது திருவடியைத் தூக்கிக் குஞ்சித பாதமாகவும், குஞ்சித பாதமாக இருக்கவேண்டிய இடது திருவடியை முயலகன் முதுகில் வைத்து ஊன்றிய பாதகமாகவும் கால் மாற்றி அமைப்பதும் உண்டு. (படம் 17 காண்க).

கால் மாறியிருப்பது தவிர வேறு மாறுதல் இல்லை. கால்மாறி யாடிய கதையைத் திருவிளையாடற் புராணத்தில் காண்க.

திருவாரூருக்குக் கிழக்கே ஏழு கல் தொலைவில் உள்ள கீழ் வேளூரில் சிவபெருமான் அகத்தியருக்குக் காட்சியளித்தபோது, வலது காலைத் தூக்கியாடி யருளியதாகக் கூறப்படுகிறது.

பாசத்தோடு கட்டுண்டு கிடக்கிற பசு (உயிர்) முயலகன் உருவாகக் காட்டப்பட்டிருக்கிறது என்று கூறினோம். பசுவாகிய (உயிராகிய) முயலகனைப் பாம்பாகவும் கூறுவர்.

66

படங்கொண்டு நின்ற இப்பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தானாய்நின் றாடுகின் றானே

என்று திருமந்திரம் கூறுவது காண்க. எனவே, படங் கொண்ட பாம்பு மும்மலத்துடன் கூடிய உயிர் என்பது தெரிகின்றது. எனவே, முயலகனைப் பாம்பாகவும் அமைத்துக் காட்டுவது உண்டு. பாம்பின்மேல் நின்று தாண்டவம் செய்கிற நடராச உருவமும் உண்டு. அதனைப் படத்தில் காண்க (படம் 18 காண்க). இப்படத்துடன் படம் 10ஐ ஒப்பிட்டுக் காண்க.