உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

அநுபல்லவி

தேடிய மாலயன் காணாத பாதர் தில்லைமூ வாயிரர் கண்டஅ தீதர் தாள்தொழு வார்க்கருள் நல்கும் பிரக் யாதர் தம்பர மானசி தம்பரநாதர்

சரணம்

அதிரும் வாணன்குட முழவோசை திசைமுட்ட அந்தரதுந் துமிநாதம் அகிலமெல் லாம்முட்டச் சதுர்முகன் இசைக்கொத்தங் கருகில் தாளந்தட்டச் சதியறிந் தயன்தாதை தூக்கிமத் தளங்கொட்ட தாகுசேகிண சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத் தோம் ததிங்கத் தோம்

ததிங்கத்தோம் கிடத தத்திமிதத்திமி தெய்தெய்

151

(ஆடிய)

ததிங்கத்தோம் கிடத தத்திமிதித்திமி தெய்தெய் (ஆடிய)

விரித்தசெஞ் சடையாட விளங்குகுண் டலமாட

மென்கைமான் மழுவாட மேனியில் பொடியாடத் தரித்தவெம் புலிபாம்பு தன்மருங்கில் இசைந்தாடத் தண்டைகிண் கிணிஇரு தாளில் அசைந்தாடத் தாகுசேகிண சேகிணங்கிட தகிங்கத்தோம் திரிகட ததிங்கத் தோம் ததிங்கத் தோம் ததிங்கத்தோம் கிடத தத்திமிதித்திமி தெய்தெய் ததிங்கத்தோம் கிடத தத்திமிதித்திமி தெய்தெய் (ஆடிய)

தாம் தகுந்தரிகு திரிகுசெம் தரிதாம்

தகுந்திரிகு திரிகு தரிகுசெம் தரி

தத்த திந்தத் தணந் தணந்திமி

தந்த திந்தத் தணந் தணந்திமி

தத்த திந்திமி தக்கிடத் திக்கிடத்தக

தந்த திந்திமி தக்கிடத் திக்கிடத்தக

தத்தடிங்கு தடிங்கு டிங்குகு தகணஜெணுத

தத்ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோ மென

(ஆடிய)