உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

அருமருந்து

இராகம் : காம்போதி

தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து தில்லை யம்பலத் தாடும் மருந்து இருவி னைகள் அறுக்கு மருந்து

(அருமருந்)

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து

(அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து

(அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து

(அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து காலனைக் காலால் உதைத்த மருந்து

நிருத்தஞ் செய்தாரே!

(அருமருந்)

இராகம் : அமிர்தவாகினி

தாளம் : மிச்சிரஜாதி ஜம்பை

பல்லவி

நிருத்தஞ் செய்தாரே ஐயர் - சதானந்த

நிருத்தஞ் செய்தாரே ஐயர்

(நிருத்தஞ்)