உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

19

நாட்டில் குடியேற்றினார். தமிழ்நாட்டில் குடியேறி வேளிரும் அருவாளரும் தமிழ்நாட்டிலே ஜைன மதத்தைப் பரப்பியதோடு நேமிநாதர், கண்ணபிரான், பலராமர் வணக்கத்தையும் தமிழ்நாட்டில் நிறுவினார்கள்.

அகஸ்திய முனிவர், கண்ணபிரான் உத்தரவு பெற்று பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழகத்தில் குடியேற்றிய செய்தியை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல் காப்பிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.

அகஸ்தியர் தென்னாடு போதுகின்றவர், துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் (தொல் எழுத்து, பாயிரம்) என்றும்,

இது மலயமாதவன், நிலங்கடந்த நெடுமுடி யண்ண லுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் (தொல்' பொருள், அகத்திணை 32-ஆம் சூத்திர உரை) என்றும் கூறுகிறார். இதனால், நேமிநாத தீர்த்தங்கரர், பாரத யுத்தகாலத்தில் பிரான் வாழ்ந்திருந்த காலத்தில்) இருந்தவர் என்பது தெரிகிறது. நேமிநாத சுவாமிக்குத் தமிழ்நாட்டிலே பல இடங்களில் கோயில்கள் இருந்தன. அத்தகைய கோயில்களில் மயிலாப்பூர் நேமிநாதர் கோயிலும் ஒன்று.

(கண்ண

ரை

சுமார் 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடல் இந்தக் கோயிலின் அருகில் வந்துவிட்ட படியால், சிறிது காலத்தில் கோயில் கடலில் முழுகிவிடும் என்று நினைத்து ஜைனர்கள் அந்தக் கோயிலில் இருந்த நேமிநாதர் திருமேனியைக் கொண்டுபோய்ச் சித்தாமூர் கோயிலில் வைத்துவிட்டார்கள், அந்த உருவம் இன்றும் சித்தாமூர் ஜைனக் கோயிலில் இருக்கிறது. மயிலை நேமிநாதர் கோவிலில் இருந்த நேமிநாதரின் செம்புச் சிலையுருவத்தையும், தர்ம தேவியின் உருவத்தையும், வந்தவாசி தாலுகாவில் உள்ள இளங்காடு என்னும் ஊரில் இருக்கிற ஜைனக் கோவிலில் கொண்டு போய் வைத்திருப்ப தாகக் கூறப்படுகிறது. டபல்யூ-ப்ரான்ஸிஸ் அவர்கள் தாம் எழுதிய தென் ஆர்க்காடு ஜில்லா கெஜட்டீர் என்னும் புத்தகத்தின் முதல் பகுதி 367-ஆம் பக்கத்தில், சித்தாமூரைப்பற்றிச் கூறுகிற இடத்தில், மயிலாப்பூர் நேமிநாத சுவாமியையும் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது

J.