உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

"இந்நூல் (நேமிநாதம்) என்ன பெயர்த்தோ எனின், இந்நூல், எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும் மெய்தெரி வகையின் விளங்க நாடித் தேனிமிர் பைம்பொழிற் றென் மயிலாபுரி, நீனிறக் கடவுள் நேமிநாதர், தந்திருப்பெயராற் செய்தமையான் நேதிநாதம் என்னும் பெயர்த்து.’

இவ்வாறு உரைப் பாயிரத்தில் உரையாசிரியர் எழுதுகிற படியினாலே, மயிலாப்பூரிலே நேதிநாதர் கோயில் இருந்தது என்பதும், அந் நேமிநாதர் பெயரினாலே நேமிநாதம் என்னும் இலக்கண நூல் செய்யப்பட்டது என்பதும் தெளிவாகிறது.

நேமிநாதம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. எப்படி என்றால் திரிபுவன தேவன் என்னும் சோழன் காலத்தில் இந் நூலாசிரியரான குணவீர பண்டிதர் இருந்தார். ஆகையினால் என்க. நேமிநாதம் உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

மயிலாப்பூரில் ஜைனக் கோயில் ஒன்று இருந்தது என்பதைத் திருக்கலம்பகம் என்னும் நூல் கூறுகிறது. திருக்கலம்பகம் என்பது உதீசித்தேவர் என்னும் ஜைனரால் இயற்றப்பட்ட நூல், இந்நூலின் ஒரு செய்யுள்.

மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்

மலர்போதி லிருந்தவர் அலர்பூவில் நடந்தவர். (செய்யுள் 74)

என்று கூறுகிறது.

மயிலாப்பூரில்

கோயில்கொண்டிருந்த

நேமிநாதருக்கு மயிலைநாதர் என்னும் வேறு பெயரும் உண்டு. மயிலைநாதர் என்பதற்கு மயிலாப்பூரில் எழுந்தருளிய கடவுள் என்று பொருள் மயிலைநாதர் என்னும் பெயரையுடைய ஒரு ஜைனர், நன்னூல் என்னும் பேர்போன தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதியிருக் கிறார். அந்த உரை மயிலைநாதர் உரை என்னும் பெயரோடு இன்றும் வழங்குகிறது. உரையாசிரியராகிய மயிலைநாதர் ஜைனர். இவர் மயிலாப்பூரிலே வாழ்ந்தவர் என்றும், மயிலாப்பூர் நேமிநாதக் கடவுளின் வேறு பெயராகிற மயிலைநாதர் என்னும் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டிருந்தார் என்றும் கூறுவர்.

மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாத சுவாமியின் பேரில் பாடப்பட்ட தோத்திரப்பாக்கள் சில தமிழிலே யுள்ளன.

-