உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

21

அவிரோழி யாழ்வார் என்பவர் முதலில் வைணவராக இருந்தார். இவர் பல சாத்திரங்களைக் கற்றவர். இவர், மயிலாப்பூர் நேமிநாதர் கோயில் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அக்கோயிலில் ஒரு ஜைன ஆசாரியார் சீடர்களுக்குச் சாத்திர பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அவிரோதி யாழ்வார், அவ்விடஞ் சற்று நின்று, ஆசாரியார் கூறிய ஒரு சூத்திரத்திற்குப் பொருள் விளங்கா மையால் அதன் பொருளைக் கூறும்படி கேட்டார். ஆசாரியார், ஜைனருக்கன்றி மற்றவருக்கு அதன் பொருள் கூறமுடியாதென்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

சூத்திரத்தின் பொருளை அறிய அவாக்கொண்ட அவிரோதி யாழ்வார், உடனே ஜைன சமயத்தில் சேர்ந்து, நேமி நாதர் ஆலயத்தை வலம்வந்தார். வலம்வரும்போது நேமி நாத சுவாமி பேரில் திருநூற்றந் தாதி பாடினார். இவ்வாறு ஜைனரான அவிரோதி யாழ்வாருக்கு ஜைன ஆசாரியார் சூத்திரத்தின் பொருளை விளக்கிக் கூறினார்.

இந்நூலின் முதல்பாட்டு, மயிலாப்பூரில் நேமிநாத சுவாமிகோயில் ரெகண்டிருந்தார் என்பதைக் கூறுகிறது. அப்பாட்டு இது,

மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்(கு) அறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிவந்த நிறமே கரியபொண் மாணிக்கமே நெடுநாளாழித்துப் புறமே திரிந்த பிழையடியேனைப் பொறுத்தருளே.

திருநூற்றந்தாதி நூறு செய்யுட்களை யுடையது. இந்த நூலுக்குப் பழைய உரை ஒன்று ஒன்று உண்டு. உரையாசிரியர் யார் என்பது தெரியவில்லை. ஏட்டுப் பிரதியாக இருந்த இந்த நூலைப் பழைய உரையுடன் மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் 1905ஆம் ஆண்டில் அச்சிட்டார்கள்.

மயிலாப்பூரில் நேமிநாதர் கோயில் இருந்தது எனபதற்கு இன்னொரு இலக்கியச் சான்றும் உண்டு. அதுதான் நேமிநாதம் என்னும் இலக்கண நூல், நேமிநாதத்தை இயற்றியவர் குணவீர பண்டிதர் என்னும் ஜைனர். இவர், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாதர் பெயரினால் நேதிநாதம் என்னும் இந்த இலக்கண் நூலை எழுதினார். இதனை. இதன் உரையாசிரியர் தெளிவாகக் கூறுகிறார். அவர் கூறுவது இது :