உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

காபாலி:

49

கள்ளப்பயலே. எங்கே போகிறாய்? என் மண்டைப் பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ.

(பிக்கு போர்த்துள்ள சீவா ஆடையின் முன்தானையைப் பிடித்துக் கொள்கிறான் காபாலிகன்.)

பௌ. பிக்கு: காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

தேவ:

காபாலி:

தேவ:

காபாலி:

தேவ:

புத்தருக்கு வணக்கம்.

கரவடனுக்கு வணக்கம் என்று சொல்லு. களவு நூலை எழுதினவன் அவன். புத்தர் கரவடனுக்கும் மேலா னவர். பிராமணர் தூங்கும்போது, மகாபாரதத்தி லிருந்தும் வேதாந்தத்திலிருந்தும் திருடி நூல் எழுதவில்லையா உமது புத்தர்13?

பாவம் சாந்தி. பாவம் சாந்தி. இவ்வளவு கைதேர்ந்த சாந்தியாகாமல் இருக்குமா!

பிக்குவின் பாவம்

ஐயா, நீர் களைப்படைந்திருக்கிறீர். அந்தக் கபால பாத்திரம் நல்லபடியாகக் கிடைக்கப் போகிறதில்லை. ஆகையால், இந்த மாட்டுக்கொம்பில் இருக்கிற கள்ளைக் குடித்து, களைப்பு தீர்ந்தபிறகு, அவருடன் வாதம் செய்யுங்கள்.

சரி. அப்படியே ஆகட்டும். (தேவசோமை மாட்டுக் கொம்பிலுள்ள மதுவைக் கொடுக்கிறான். காபாலிகன் வாங்கிக் குடித்துவிட்டு) நீயும் கொஞ்சம் குடி. நீயும் களைப்படைந்திருக்கிறாய். (அவளிடம் கொடுக்கிறான்.) அப்படியே. (அவளும் குடிக்கிறாள்.)

இவர் நமக்குத் தீங்கு செய்தவர் தான். ஆனாலும், சமய நூல், எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும்படி கட்டளையிடுகிறது. ஆகையால் இந்தச் சந்நியாசிக்கும் அதில் கொஞ்சம் கொடு.

அப்படியே. ஐயா! இதை வாங்கிக் கொள்ளுங்கள்.