உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பாசு:

காபாலி:

பௌ. பிக்கு:

பாசு:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19 அப்படியல்ல. நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையும், திண்மையும், உறுதியும், நுட்ப அறிவும், குடிப்பிறப்பும் உள்ளவர்கள். மாளிகையைத் தூண்கள் தாங்குவதுபோல, நீதியை இவர்கள் தாங்குகிறார்கள். நீங்கள் சொல்லுவது என்ன? யோக்கியனாக உள்ளவன் அஞ்சவேண்டிய காரணமே இல்லை. அப்படியானால், நீதிமன்றத்துக்கு நடவுங்கள்.

ஆமாம்! அதுதான் நல்லது.

(எல்லோரும் நடக்கிறார்கள். பயித்தியக்காரன் ஒருவன் வருகிறான்)

பைத்தியக்காரன்: அதோ, அந்த நாய்! வறுத்த மாமிசம் உள்ள அந்த

மண்டையோட்டைத் திருடிக்கொண்டு ஒடுகிறாயா? தேவடியாள் மகனே! நீ எங்கே போகப் பார்க்கிறாய்? மண்டையைப் போட்டுவிட்டு, அது என்னைக் கடித்துத் தின்ன வருகிறது. (நாற்புறமும் பார்க்கிறான்.) இந்தக் கல்லினால் அதன்பல்லை உடைக்கிறேன்; பார். மண்டையைப் போட்டுவிட்டு ஓடுகிறாயா, பித்துக் கொள்ளி நாயே! கடல் மானத்திலே குதித்துப் பன்றியின் மேல் ஏறிக் கொண்டு ராவணனை அடித்து இந்திரன் மகனை தூக்கிக் கொண்டு வந்துடுத்து. அடே எருக்கஞ்செடி! நீ என்ன சொல்றே? பொய் இன்னா சொல்றே. இந்த தவளையைப் கேட்டுப்பார். மூ லோகத்திலும் இணையில்லாத எனக்குக்கூட சாக்ஷி வேணுமா? என்ன செய்கிறேன் பார். அது வைச்சிட்டுப் போன அந்தச் சோத்தைத் தின்னு போடறேன். (தின்கிறான். பிறகு அழுகிறான்) ஓ, ஓ! நான் அழுகிறேன்; அழுதுண்டே சாகிறேன். (அழுகிறான். பிறகு நாற்புறமும் பார்க்கிறான்.) ஏண்டா என்னை அடிக்கிறிங்கோ; போக்கிரிப் பசங்களா! பீமன் மைத்துனன் கடாற்கஜனைப் போல நான் அவனுக்கு- அவன் பேர் என்ன? அவன், அவன், அவனுக்கு மச்சினன்தான். ஆயிரம் பேய்கள் என் வயித்திலே