உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

57

பாசு:

பைத்திய:

பாசு:

பைத்திய:

பௌ. பிக்கு:

பைத்திய:

காபாலி:

தேவசோ:

புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். (பார்க் கிறான்.) அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன் (ஓடுகிறான்.)

அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங் கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள்.

(அருகில் வந்து) ஒரு சண்டாளப் சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டை யோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ.

(நோக்கி) அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு..

ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும். கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர்.

(காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.) தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும்.

இதோ நம்முடைய கபால பாத்திரம்!

ஆமாம்! அதுதான்! அதுதான்!!