உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

71

பொதிந்து கிடக்கின்றன. எனவே, நடராச உருவத்தில் கலையழகும் சாத்திரக் கருத்தும் ஆகிய இரண்டும் அடங்கியுள்ளன. இவற்றை விளக்குவதுதான் இந்த நூல் எழுதப்பட்டதன் நோக்கமாகும். அதை இங்குச் சுருக்கமாக விளக்கிக் கூறுவோம். தத்துவக் கருத்தை அறிந்து கொண்டால்தான் நடராச சிற்ப உருவத்தில் பொதிந்துள்ள ஒவ்வோர் அடையாளத்தையும் குறிப்பையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும் தத்துவக் கருத்தை அறியாமற் போனால், நடராச சிற்பக் கலையில் அழகை முழுவதும் கண்டு மகிழமுடியாது.

கூறப்படுகிறது.

சைவசித்தாந்த சமயத்தில் பஞ்சகிருத்தியம் என்னும் ஐஞ்செயல் இந்தப் பஞ்சகிருத்தியமாகிய ஐஞ்செயலை விளக்குவதுதான் ஆனந்தத் தாண்டவ சிற்ப உருவம். இந்தச் சிற்பந்தான் நடராச உருவம் என்று கூறப்படுகிறது. மனித உயிரில் அநாதியாகப் படிந்திருக்கிற அழுக்கைப் போக்கி, அவ்வுயிரைத் தூய்மைப்படுத்தி, அதை இன்பநிலையில் வைக்கிறார் கடவுள். உயிருடன் கலந்துள்ள அழுக்கைப் (பாசத்தைப்) போக்கி இன்பநிலையைத் தருவதற்காகக் கடவுள் ஐந்தொழில் செய்கிறார். அந்த ஐந்தொழில் நடராச சிற்ப உருவத்தில் நன்கு காட்டப்படுகிறது. ஆனந்தத் தாண்டவம் என்னும் நடராச சிற்பத்தில் ஐந்தொழிலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றை விளக்கிக் கூறுவோம்.

அனாதி கலாம்முதல் உயிருடன் படிந்திருக்கிற பாசம் என்னும் அழுக்கைப் போக்கி, உயிர்களுக்கு ஞானத்தை விளங்கச் செய்து, இன்பநிலையைத் தருகிறார் கடவுள் என்று கூறினோம். இப்படிச் சுருக்கமாகக் கூறினால் முழுக் கருத்தையும் விளங்கிக்கொள்ள முடிய வில்லை. ஆகவே, இதனைச் சற்று விளக்கமாகக் கூறுவோம். இந்த விளக்கத்தை முப்பொருள், ஐஞ்செயல், நோக்கம் என்னும் மூன்று பிரிவுகளில் கூறுகிறோம்.

1. முப்பொருள்

முப்பொருளானவை கடவுள் (பதி), உயிர் (பசு), அழுக்கு (பாசம்) என்பவை இம் மூன்று பொருளும் அனாதியானவை அதாவது இவற்றை ஒருவரும் படைக்கவில்லை; இவை எக்காலத்திலும் உள்ளன. இம் மூன்று பொருள்களில் கடவுள், அழுக்கினால் கட்டுப்படாமல் தூயவராகத் தனித்திருக்கிறார். அவர் என்றும் தூய்மையாக இருக்கிறார். மற்றப் பொருளாகிய உயிரும் அழுக்கும் (பசுவும் பாசமும்)

6