உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

75

இவ்வாறு உயிர்கள் புதிய வினைகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பதனாலும், கடவுள் அவ்வினைகளுக்கேற்பப் புதிது புதிதாகத் தனு, கரண, புவன, போகங்களை உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டிருப்பதனாலும் யாது நன்மை என்றால் உயிர்களிடம் படிந்துள்ள மாசு நீங்குவதற்கு இதனால் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதைச் சிவப்பிரகாசம் என்னும் நூலில் சிவப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் இவ்வாறு விளக்கிக் கூறுகிறார்:

"சங்கரிக்கிறது, கன்மத்தினால் அலைப்புண்ணும் ஆன்மாக்களை இளைப்பாற்றுகை. அப்படி இளைப்பாறிக் கிடவாமல் மீளவும் தோற்று விப்பானெனில், மலம் நீங்காத படியினாலே அந்த மலம் நீங்குகைப் பொருட்டாகத் தனு, கரண, புவன, போகங்களோடும் கூட்டுகிறதாயிருக்கும். அப்படி சிருட்டிக்கிறபோதே அந்த மலத்தைப் பாகம் வருவித்துத் தன்னிடத்திலே கூட்டிக்கொள்ளாமல் நெடுங்காலம் திதி என்கிற தொழிலிலே நிறுத்தினது, ஆன்மாக்களுக்குக் கன்மங்கள் மிகுதியா யிருக்கையினாலே, அந்தக் கன்மங்களைப் புசிப்பித்து இயல்பிலே மலபாகம் வருவிக்கிறதாயிருக்கும்.”4

4

அழித்தல் என்பது ஆன்மாக்களை இளைப்பாற்றுதற் பொருட்டுச் செய்யப்படுகிறது.

4. மறைத்தல் (திரோபவம்)

மேலே கூறியபடி படைத்தல், காத்தல், அழித்தல் செயல்களி னாலே உயிர்கள் பிறந்து, இருந்து, இறந்து செயற்படுகின்றன. இவ்வாறு பலகால் உழன்றும் இவை கருமஞ் செய்வதிலே வெறுப்படையாமல் அதைச் செய்வதிலே மேலும் மேலும் இச்சைகொள்ளும்படி செய்தலே மறைத்தல் செயலாகும். இவ்வாறு உலக விஷயங்களிலே மேன்மேலும் உயிர் இச்சைகொள்வதினாலே, புதியபுதிய வினைகளைச் செய்து, அவ்வினைகளுக்கேற்பப் பல பிறவிகளில் பிறந்து, இருந்து, இறந்து உழல் கின்றது. இவ்வாறு பிறந்து இறந்து உழல்வதினாலே, உயிர்களிடத்தில் படிந்துள்ள மாசு (மலம்) செயற்படுகிறது. மலம் தொழிற்படுகிறபடியி னாலே அதன் ஆற்றல் குறைகிறது. மலத்தின் வலிமை குறையக் குறைய உயிர் தூய்மையடைகிறது.