உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

எனவே, ஆன்மாக்களில் படிந்திருக்கிற பாசங்களை நீக்குகிற சங்கார வடிவமானது தீச்சுடர் என்னும் தத்துவப் பொருள் அறியத் தக்கது.

சூலம்

மற்றொரு கையில் சூலம் ஏந்தியிருக்கிறார். சூலம் மூன்று பிரிவுடையது. "மூன்று பிரிவுடைய சூலம் மூன்று குணத்தைக் குறிக்கிறது” என்று காமிகாகமம் கூறுகிறது.13

ஆரணி, செனனி, இரோதயித்திரி என்று மூன்று சக்தி வடிவினதாகிய மூன்று கவர்களையுடைய சூலப்படையானது அவர் முத்தொழிலுடைய ரென்பதையும், மும்மலங்களை நீக்குபவரென்பதையும் குறிக்கிறது' என்னும் வேறு கருத்தைப் பௌஷ்கராகமம் கூறுகிறது. (ஆரணியானது அழித்தல் செயலையுடையதாய் உயிர்களைத் தத்துவத்தினின்றும் தத்துவாந்தத்தை அடைவிப்பது; சென்னியானது ஆக்கல் தொழிலுக்குக் காரணமாயிருப்பது. இரோதயித்திரியானது உயிர்களைப் போகங்களில் நிறுத்துவது.)

எனவே,திரிசூலம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் சக்திகளைக் குறிக்கிறது. 'மூவிலை யொருதாட் சூலம் ஏந்துதல், மூவரும் யானென மொழிந்தவாறே' என்பது ஒருபா ஒருபஃது4. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரும் தாமே என்பது பொருள்.

பாசம்

நடராசர் ஒரு கையில் பாசக்கயிற்றைக் கொண்டிருக்கிறார். பாசக் கயிறு ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது என்று காமிகாகமம் கூறுகிறது.

ஆன்மாக்களுக்கு மலத்தை ஊட்டுவிப்பவர் தாம் என்பதை அறிவிக்கும் காரணமாக மாயா ரூபமாகிய பாசக்கயிற்றை ஏந்தி யுள்ளார்' என்றும் கூறுவர். மும்மலங்களைக் குறிக்கிறபடியினாலே, பாசக்கயிற்றை முப்புரி (பாசத்திரயம்) என்றும் கூறுவர்.

கோடரி (பரிசு)

இந்த ஆயுதம் கடவுளின் பேராற்றலைக் குறிக்கிறது. இதை மழு என்றும் கூறுவர். இது பராசக்தியின் உருவம் என்பதையும், லயத்தானம்