உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

89

என்பதையும் தெரிவிக்கிறது. பராசக்திக்கு மேலானவரும் லயசிவமா யிருப்பவரும் தாம் என்பதை உணர்ந்த இறைவன் மழு ஏந்தியுள்ளார் என்பர்.

மணி

ஓசையின் சொரூபமான மணி ஏந்தி யிருப்பது இறைவனின் மந்திர ரூபத்தைக் குறிக்கிறது' என்று காமிகாகமம் கூறுகிறது.

15

நாத தத்துவத்திற்குத் தலைவர் தாம் என்பதை உணர்த்துவதற்கு ஓசையின் உருவாகிய மணியை இறைவன் ஏந்தியுள்ளார் என்றும் கூறுவர்.

அபய கரம்

இறைவன் ஒரு கையில் அபயமுத்திரை காட்டுகின்றார். இதை ‘அமைத்த கை' என்பர். இது காத்தல் தொழிலைக் குறிக்கிறது என்பர். 'அமைத்தல் திதியாம்' என்பது திருமந்திரம். 'தனித்தனி வகுத்த சராசரப் பகுதி அனைத்தையும் காப்பதுன் அமைத்த பொற் கரமே' என்றார் குமரகுருபர சுவாமிகள்.16 'அபய கரமானது உலகங்களைக் காக்கிற சக்தியாகும் என்பது காமிகாகமம்.

வீசிய கை (கஜ ஹஸ்தம்)

இது எப்போதும்

தூக்கிய திருவடியைக் காட்டிக் கொண்டிருக்கிறது. தூக்கிய பாதம், உயிர் மலத்தினின்று விடுபட்ட நிலையைக் காட்டுகிறது. ஆகவே, அதனோடு பொருந்தியுள்ள வீசிய கரம், உயிர் பேரின்ப நிலையையடைகிற செய்தியைக் குறிக்கிறது போலும். சில சிற்ப உருவங்களில் வீசிய கை தலைக்கு மேலே தூக்கப் பட்டிருப்பதும் உண்டு.

பாம்பு

தாண்டவப் பெருமான் கையில் பாம்பை ஏந்தியுள்ளார். உடம்பிலும், அரையிலும், கையிலும் பாம்பை அணிந்திருக்கிறார். 'கம்பீர வடிவமான நாகசக்தியானது யாவற்றையும் நியமிப்பது என்னும் கருத்தைக் காமிகாகமம் கூறுகிறது.17

திருநாவுக்கரசரும் இதனையே கூறுகிறார்.