உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

போர்ப்பனை யானையுரித்த பிரான், பொறி வாயரவம் சேர்ப்பது, வானத் திரைகடல் சூழல கம்இதனைக்

காப்பது காரண மாகக்கொண்டான், கண்டி யூரிருந்த

கூர்ப்புடை யொள்வாள் மழுவனை யாமண்டர் கூறுவதே

என்று அவர் கூறியிருப்பது காண்க. எனவே, உலகம் தோன்றவும் ஓடுங்கவும் தாம் நிமித்த காரணர் என்பதை உணர்த்த குண்டலினி சக்தி யுருவமாகிய பாம்பைச் சிவன் ஏந்தியுள்ளார் என்பது அறியத்தக்கது. முயலகன்

தாண்டவப் பெருமானுடைய ஊன்றிய பாதத்தின் கீழே முயலகன் உருவம் காணப்படுகிறது. முயலகனைக் கரு என்றும், குறள் என்றும், அபஸ்மாரன். என்றும் கூறுவர். 'கருவின் மிதித்த கமலப் பாதம்' என்பது திருமந்திரம். 'காருடல் பெற்ற தீவிழிக்குறள்' என்பது கல்லாடம். ‘மூடாய முயலகன்' என்றார் சுந்தர மூர்த்திகள். முயலகன் கருநிறமும், விகார உருவமும் உள்ளவன். முயலகன் உருவம் பாசத்துடன் (மலத்துடன்) இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. முயலகன் கையிலும் படங் கொண்ட பாம்பு ஒன்று இருக்கிறது. இப்பாம்பு, ஆணவ மலத்தைக் குறிக்கிறது போலும்.

66

படங்கொடு நின்ற இப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தானாய்நின் றாடுகின்றானே

என்பது திருமந்திரம். இதில் ‘படங்கொடு நின்ற பல்லுயிர்' என்பது ஆணவ மலங்கொண்ட உயிர்கள் என்று பொருள்படும்.

திருவாசி

நடராசப் பெருமானைச் சூழ்ந்து திருவாசி இருக்கிறது. இது ஒங்காரத்தைக் குறிக்கிறது என்பர். 'ஓங்காரமே நல்திருவாசி, உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம்' என்பது உண்மை விளக்கம்.