உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

99

அழுத்துகிறார். இந்தச் சிற்பத்திலோ, அதற்கு மாறாக, முயலகன் குப்புறக் கிடவாமலும், மிதித்து அழுத்தப்படாமலும், யாதொரு கவலையும் இன்றி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறான். தாண்டவப் பெருமானுடைய பாதங்கள் அவனை ஊன்றி மிதித்து அழுத்தவில்லை. துடி ஏந்திய கை காதுக்கருகில் இருக்கிறது. ஆனால், தீ ஏந்திய கை அப்பால் அகன்று இருக்கிறது.

இக்குறிப்புகளும் அடையாளங்களும் நமக்கு எதைத் தெரிவிக் கின்றன? இந்தக் குறிப்புகளைக் கொண்டு நாம் தெரிந்துகொள்வது என்ன? முயலகன், பாசத்துடன் கூடிய உயிரைக் குறிக்கிறான் என்பதை அறிவோம். இந்தத் தாண்டவத்தில் முயலகன் நிமிர்ந்து உட்கார்ந்திருக் கிறான். தாண்டவ மூர்த்தியின் பாதம் அவனை அழுத்தி மிதிக்க வில்லை. இக்குறிப்புகளைக் கொண்டு உயிரினிடத்தில் படிந்துள்ள மலம் தொழிற்பட்டு இருவினைச் செயல் நன்கு நிகழ்கிறது என்பதை அறியலாம். அன்றியும், சிவனுடைய வலது கையில் உள்ள துடி, அவருடைய செவிக்கு அருகில் ஒலிக்கப்படுவதையும் காண்கிறோம். துடியை ஒலித்து அவ்வோசையிலிருந்து படைத்தல் தொழிலைக் கடவுள் செய்கிறார் என்று நூல்கள் கூறுகின்றன. 'தோற்றம் துடியதனில்' என்பதும், ‘அரன் துடி தோற்றம்' என்பதும் ஆன்றோர் வாக்குகள். துடியிலிருந்து உண்டாகிற நாதம் ஓங்கார ஒலியாகும். அன்றியும், இறைவனுடைய செவி ஓங்கார வடிவத்தைக் குறிக்கிறது என்பர் நாதத்தை உண்டாக்கும் துடியும், ஓங்காரத்தைக் குறிக்கும் செவியும், இந்தப் படைப்புத் தாண்டவத்தில் ஒன்றுக்கொன்று அண்மையில் சேர்ந்துள்ளன.

"

மற்றும், இன்னொரு வலது கையில் பாசக்கயிறு காணப்படுகிறது. பாசக்கயிறானது ஆன்மாவில் படிந்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது. மற்றொரு கையில் திரிசூலம் பிடித்திருக்கிறார். (சூலத்தின் மூன்று கூறுகள் இச்சிற்பத்தில் உடைந்து விட்டன.) திரிசூலமானது உயிருடன் படிந்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலத்தைக் குறிக்கின்றது.

இந்தச் சிற்பத்தின் இடது கைகளைப் பார்ப்போம். ஒரு கையில் தீச் சுடர் இருக்கிறது. அழித்தல் செயலைக் குறிக்கிற தீச்சுடர் இங்குச் சற்று விலகி இருக்கிறது. மற்றொரு கை மணியை ஏந்தி ஓசையுண்டாக் குகிறது. இது நாத தத்துவத்தைக் குறிக்கிறது. மூன்றாவது இடதுகை