உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

339


மணஞ்செய்துகொண்டு அங்குத் தங்கியிருந்த சோழ அரசனுடனும் சில நாட்கள் தங்கியிருந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது.[1]

“தென்னவப்ரகோன் மகளாரைத் திருவேட்டு முன்ரே
தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார்
அன்னவர்கள் உடன்கூட அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்”

“செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன்
நம்பியுமுன் புறத்தணைய நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணிமாளிகையில் குறைவறுத்தார் பஞ்சவனார்”

சுந்தரரையும் சேரமானையும் வரவேற்ற பாண்டியன், வரகுண பாண்டியன் மகனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனாக இருத்தல் வேண்டும்.

சேரமான், சுந்தரருடன் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்த பிறகு சுந்தரரைத் தமது ஊருக்கு அழைத்துச் சென்றார். சிலநாள் கழித்து இருவரும் திருக்கயிலாயம் சென்றார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இலங்கைத் தீவு

சிலாமேகன்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேனன் என்னும் பெயருள்ள இரண்டு அரசர்கள் இலங்கைத் தீவை அரசாண்டார்கள். முதலாம் சேனன் ஏறக்குறைய கி. பி. 821 முதல் 841 வரையிலும், இரண்டாம் சேனன் கி. பி. 841 முதல் 876 வரையிலும் அரசாண்டார்கள். இவர்களுடைய வரலாறு மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சத்தில் 50, 51-வது அத்தியாயங்களில் கூறப்படுகிறது. அதன் சுருக்கம் இது:

ஒன்பதாம் அக்கபோதிக்குப் பிறகு, முதலாம் சேனன் இலங்கைக்கு அரசனானான். இவனுக்குச் சிலாமேகன் என்னும் பெயரும் உண்டு. இவனுக்குத் தலைநகரம் புலத்தி நகரம். இந்தச் சனேனுக்கு உறவினனும் அரசுரிமையுடையவனுமான மகிந்தன் என்பவன் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்தான். (தமிழ்நாட்டில் எங்கே யாரிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தான் என்பது தெரியவில்லை.) சேனன், தன்னுடைய ஆட்களை அனுப்பி மகிந்தனைக்

  1. 28